search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Governor"

    • மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.
    • 6 மாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

    அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.

    இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்திக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நேர்மையானவர் என மக்கள் சான்றிதழ் அளிக்கும் வரை முதல்வர் நாளற்காலியில் அமரப்போவதில்லை என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்.
    • இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது.

    இந்தியாவுக்கான டென்மார்க்கின் தூதரக அதிகாரி ஃப்ரெடி ஸ்வேன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், 'பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்'என்று தூதரக கட்டிடத்திற்கு வெளியே உள்ள குப்பைக் கிடங்கை அவர் காட்டுகிறார்.

    இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது. இது ஒரு சர்வீஸ் ரோடாக இருக்க வேண்டும், ஆனால் அது குப்பைகளால் நிரம்பியுள்ளது. இது குறித்து யாராவது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    தூதரக கட்டிடத்திற்கு வெளியே குப்பைக் கிடங்கு உள்ளதை காட்டிய அவர் யாராவது இதைக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில், டெல்லி முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி கவர்னர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குகளை அவர் டேக் செய்துள்ளார்.

    • டெல்லியில் இலவச மின்சார திட்டம் குறித்து விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் சமீபத்தில் உத்தரவிட்டார்.
    • மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது. இதுதொடர்பாக வார்த்தைப் போர் தொடர்கிறது. ஆம் ஆத்மி அரசாங்கம் கொண்டு வந்துள்ள இலவச மின்சார திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா சமீபத்தில் உத்தரவிட்டார்.

    துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக சாடினார். "ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்" என கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.

    இதற்கிடையே மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல், என்று காட்டமாக குறிப்பிட்டார்.

    ஆளுநரின் இந்த கண்டனத்தை தொடர்ந்து இன்று கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், "துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா என்னை தினமும் திட்டும் அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. கடந்த ஆறு மாதங்களில் துணைநிலை ஆளுநர் கடிதம் எழுதிய அளவுக்கு, என் மனைவி எனக்கு காதல் கடிதங்கள் எழுதவில்லை. ஆளுநர் அவர்களே, நீங்கள் கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதுபோல் உங்களை இயக்குபவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba
    புதுடெல்லி:

    டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார்.  #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews 
    மாநில அரசு உரிமைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
    சென்னை:

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே கவர்னர் நடக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள கவர்னர்களும், குறிப்பாக தமிழக கவர்னர் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் ஜெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு இடையிலான மோதலில் பிரதமர் மோடியின் தலையீடு அவசியம் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். #MamataBanerjee #PMModi #Kejriwaldharna
    புதுடெல்லி:

    டெல்லியில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ள மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் ஜெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு இடையிலான மோதலில் பிரதமர் மோடியின் தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

    கர்நாடக முதல் மந்திரி குமாரிசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் இணைந்து இந்த கோரிக்கையை பிரதமருக்கு முன்வைப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா, அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ள நாட்டின் கூட்டாட்சி என்னும் அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #MamataBanerjee #PMModi #Kejriwaldharna
    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா நடத்திவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Kejriwaldharna #Delhilg #Mamata
    புதுடெல்லி:

    டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னரிடன் அனுமதி கேட்டனர்.


    ஆனால், இதற்கு கவர்னர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாகின் மனைவியை சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    நாட்டின் தலைநகரான டெல்லியில் இப்படி நடந்தால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்னவாகும்?.  அரசியலமைப்பு சார்ந்த சிக்கலாக உருமாறும் முன்னர் இந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.

    இன்று பிரதமர் மோடியை சந்திக்கும்போது கவர்னர் - கெஜ்ரிவால் இடையே நடந்துவரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவேன் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #Kejriwaldharna #Delhilg #Mamata
    டெல்லியில் ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ.க. தலைவவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #KejriwalProtest #DelhiBJP #AAPProtest #DelhiBJPHungerStrike
    புதுடெல்லி:

    டெல்லியில் ஐஏஸ் அதிகாரிகள் மாநில அரசுக்கு ஒத்துழைக்காமல் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று  5-வது நாளாக  நீடிக்கிறது. ஆனால் அவர்களின் கோரிக்கை குறித்து ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 

    டெல்லி அரசின் செயல்பாடு முடங்கியிருப்பதற்கு மத்திய அரசும் துணை நிலை ஆளுநரும் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க. அரசு தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார் 

    இது ஒருபுறமிருக்க, கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் போராட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் போட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைமைச்செயலகத்தில் பா.ஜ.க. தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இன்று காலை முதல் பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    மேற்குடெல்லி பா.ஜ.க. எம்.பி. பிரவேஷ் சிங் சாகிப் வர்மா. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, மன்ஜிந்தர் சிங் சிர்சா எம்.எல்.ஏ.வுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்ததாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறினார்.

    மேலும் போராட்டத்தை கைவிடும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் மிஸ்ரா கூறினார்.

    இவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KejriwalProtest #DelhiBJP #AAPProtest #DelhiBJPHungerStrike 
    கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார். #Kejriwal #SheilaDikshit
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.

    1998 முதல் 2013 வரை டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்த ஷீலா தீட்சித், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானுடன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கவர்னர் மற்றும் உயரதிகாரிகளுடன் அனுசரித்துப் போக தெரியாத கெஜ்ரிவால், தன்னிடம் முழு அதிகாரம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்காமல் மேம்பாட்டுப் பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என ஷீலா தீட்சித் அறிவுறுத்தினார்.

    ‘1998 முதல் 2003-ம் ஆண்டுவரை டெல்லி முதல் மந்திரியாக நான் பதவி வகித்த முதல் ஆட்சி காலத்தில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டெல்லி முதல் மந்திரியாக நான் பொறுப்பேற்றிருந்தபோது எரிசக்தி திறையை தனியார் மயமாக்கியது, டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுக்கு வாகனங்களை மாற்றியது மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எனது அரசு நிறைவேற்றியது.

    எங்களுக்கும் பல தடைகள் இருந்தன. ஆனால், கவர்னருடன் மோதல் போக்கை கையாளாமல் டெல்லியின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபட்டோம்.

    அரசை வழிநடத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை என்று கூறுவதன் மூலம் டெல்லி மண்ணின் மீதும் காவல் துறையிலும் தனக்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார். இருப்பினும், இதர துறைகளில் இந்த ஆம் ஆத்மி அரசு செய்துள்ள சாதனைகள் என்ன? என்பதையும் அவர் குறிப்பிட வேண்டும்.

    கவர்னர் மற்றும் தலைமை செயலாளருடன் மோதல் போக்கை கடைபிடித்து, அரசின் துறை செயலாளர்களின் அலுவலகங்களை எல்லாம் பூட்டி வைத்து கொண்டால் எந்த அதிகாரி அவருடன் ஒத்துழைப்பார்? என்பதையும் கெஜ்ரிவால் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் மந்திரி கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது, இதற்கு முன்னர் நாம் காணாத நிகழ்ச்சியாகும். இதன்மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார்’ என்று ஷீலா தீட்சித் கூறினார். #Kejriwal #SheilaDikshit
    டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயகர நிலைக்கு சென்றுள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசிவருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 8 மடங்கு மாசு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் இன்னும் சில நாட்களுக்கு மாசு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
    ×