என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Delhi Pollution"
- ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
- காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல்காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நேற்று வந்தனர்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில், அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக சோனியா காந்தி ஜெய்ப்பூருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபாலிடம் சோனியாவின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் தனிப்பட்ட பயணமாக சோனியா காந்தி ஜெய்ப்பூர் வந்துள்ளதாக பதில் அளித்தார்.
மேலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, உடல்நலப் பிரச்சனை காரணமாக 4 நாள் பயணமாக ஜெய்ப்பூருக்கு சோனியா வந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் மாறியுள்ளது.
- டெல்லியில் காற்று மாசு இன்று நான்காவது நாளாக 500ஐ தாண்டியுள்ளது.
டெல்லி முழுவதும் உள்ள அனைத்து காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களும் பிஎம்2.5 அளவு 450 மைக்ரான்களுக்கு மேல் இருப்பதாக தெரிவித்துள்ளன.
டெல்லியின் காற்றின் தரம் மீண்டும் 'கடுமையான' பிரிவில் சரிந்து, இன்று நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் மாறியுள்ளது.
நிகழ்நேர காற்றுத் தரக் குறியீடு (AQI) தலைநகரின் பல்வேறு பகுதிகளில் 500க்கு மேல் உள்ளது. நண்பகலில், டெல்லியில் உள்ள வஜிர்பூர் கண்காணிப்பு நிலையத்தில் அதிகபட்ச அளவு 859 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் பிஎம்2.5 செறிவு நிலை தற்போது உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தர வழிகாட்டுதல் மதிப்பை விட 96.2 மடங்கு அதிகமாக உள்ளது.
டெல்லியில் மாசு அளவு உலக சுகாதார அமைப்பு அறிவித்த வரம்புகளை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் எனவும் தொடர்ந்து நான்காவது நாளாக 500ஐ தாண்டியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.
காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.
டெல்லியில் இன்று காலையில் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை மூடியிருந்தது. புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். புகையில் இருந்து காத்துக்கொள்ள பலர் முகமூடி அணிந்து சென்றனர். #DelhiPollution #AirPollution #Diwali
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், டெல்லியில் இன்று காலை காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு மிக மோசம் என்ற அளவில், 345 என்ற அளவிற்கு மாசு அதிகரித்தது. இது பாதுகாப்பான அளவைவிட 14 மடங்கு அதிகம்.
மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (காற்று தர குறியீட்டு எண்) அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 மிக மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது. #DelhiPollution
டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. குளிர்காலத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எஞ்சி நிற்கும் தாளடிகளை எரிப்பதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இன்று காற்றின் தரம் 348 என்ற நிலையில் இருந்தது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், காற்று மாசுக்கு மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள் மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநில விவசாயிகளை பிரதமர் மோடி நேற்று வெகுவாகப் பாராட்டியதுடன், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள தாளடிகளை எரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. #DelhiAirPollution #DelhisPollution #Kejriwal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்