search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue transmission"

    • சுகாதாரத்துறையினர் கணக்குப்படி கடந்த ஒரு மாதத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நகர மற்றும் கிராமப்புறங்களில் சமீபநாட்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையினர் கணக்குப்படி கடந்த ஒரு மாதத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த தகவலையும் சுகாதாரத்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். உள்ளாட்சி நிர்வாகத்தினர், வார்டு வாரியாக காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அக்டோபர் தொடக்கத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

    5முதல் 10-க்குள் இருந்த அன்றாட பாதிப்பு நேற்று முன்தினம் ஒன்றாக மாறியது. மாத துவக்கத்தில், கண்காணிப்பில் 101 பேர் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி 20க்கும் குறைவானவர்கள் சுகாதாரத்துறை பட்டியலில் உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் தினசரி பாதிப்பு பூஜ்யம் என்ற நிலையை எட்டும். கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் திருப்பூர் மாறும் என்றனர்.

    ×