என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » detailed report
நீங்கள் தேடியது "detailed report"
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AmritsarTrainAccident
புதுடெல்லி:’
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற தசரா விழாவின்போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மாநில அரசும், ரெயில்வே வாரியம் மற்றும் ரெயில்வே அமைச்சகம் ஆகியவை 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. #AmritsarTrainAccident

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்குமாறு முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று அம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இறந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கினார்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மாநில அரசும், ரெயில்வே வாரியம் மற்றும் ரெயில்வே அமைச்சகம் ஆகியவை 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. #AmritsarTrainAccident
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiShooting
மதுரை:
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்த முன்வந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் தொடர்பாக, டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என முத்து அமுதநாதன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த இரு வழக்குகளையும் இன்று நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது, பதில் மனுவுக்கு பதிலாக அரசுத்தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை வருகிற 6-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். #ThoothukudiShooting

×

X