search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devara Tirupathigam"

    • ராஜராஜ சோழனின்,1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவிநாசி :

    அவிநாசி கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின், 1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.

    அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தேவாரம், திருமுறை விண்ணப்பம் செய்தனர்.

    முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவிநாசி கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார், நானிலம் போற்றும் நால்வரின் பெருமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    சிவக்குமார் சிவாச்சார்யார் தலைமையில், பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தலைமையில் , கோவில் ஓதுவாமூர்த்தி சிவசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    ×