search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devi sri prasath"

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'புஷ்பா' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சாரிடம் சென்று ஆசிபெற்றேன். நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சார். அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது" என்று பதிவிட்டுள்ளார்.




    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் இன்று வெளியானது.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் இன்று வெளியானது. இதில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக! " என்று பதிவிட்டுள்ளார்.




    • நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார்.
    • இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    விஷால் 34 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஷாலின் 34-வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.




    ×