என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dieying company"
- சில சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
- உடலில் மஞ்சள் நிற தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்,சின்னக்கரை, கரைப்புதூர், கணபதிபாளையம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் நிலை ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
அதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பருவ மழை காலங்களில் இது போன்ற விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,பச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு விவசாய தோட்டத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பாலாமணி என்பவர் கூறுகையில் ,மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. உடலில் இந்த தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது. விவசாயத்திற்கு விட்டால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. மகசூல் கிடைப்பதில்லை. தென்னை மரம் நாளுக்கு நாள் காய்ந்து வருகிறது. கால் நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால் அந்த கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களது அன்றாட சொந்த உபயோகத்திற்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுபாட்டு உதவி செயற்பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.