என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Digvijay Singh"
- வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
- திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
போபால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான தக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்' என குறிப்பிட்டு இருந்தார்.மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
போபால்:
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய்சிங் போபாலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைஜ்நாத் குஷ்வாகாவை பா.ஜனதா எம்.எல்.ஏ. நாராயன் திரிபாதி உணவகத்துக்கு அழைத்து சென்று பேசினார். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் நரோத்தம் மிஸ்ரா, விஸ்வாஸ் சாரங் ஆகியோரும் இருந்தனர்.
மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு ரூ.100 கோடி தருவதாக குஷ்வாகாவிடம் அவர்கள் பேரம் பேசியுள்ளனர். மேலும் புதிதாக பா.ஜனதா அரசு அமைந்தால் மந்திரி பதவி தருவதாகவும் கூறியுள்ளனர். குஷ்வாகா அதற்கு மறுத்துவிட்டார். மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா கட்சியின் தோல்வியை சிவராஜ்சிங் சவுகானால் ஜீரணிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திக்விஜய் சிங்கின் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:-
திக்விஜய் சிங் இது போன்ற குற்றச்சாட்டுகளை நீண்ட காலமாக தெரிவித்து வருகிறார். சுய விளம்பரத்துக்காக அவர் நாடகமாடுகிறார். குற்றச் சாட்டுக்கான ஆதாரம் அவரிடம் இருந்தால் அவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #congress #mpgovt #digvijaysingh #bjp
சமீபத்தில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருந்த திக்விஜயா சிங் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார்.
இதேபோல், அந்தமான் நிக்கோபார் மற்றும் மேற்கு வங்காளம் மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். #OommenChandy #inchargeofAP
அவ்வகையில், மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.
இதேபோல், தேர்தல் பிரசாரக்குழு தலைவராக ஜோதிராதித்யா சிங் மற்றும் தேர்தல் திட்டக்குழு தலைவராக சுரேஷ் பச்சவுரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshCongress #DigvijaySingh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்