search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dotal awareness program"

    • நாட்டுநலப்பணி திட்டம் சாா்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • அலகு-2ன் பொறுப்பாளா் உதவிப்பேராசிரியா் பி. முருகன் நன்றி தெரிவித்தாா்.

    திருப்பூர்:

    இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி திருப்பூா் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நிப்ட்-டி கல்லூரியில் தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி நூலகத்துறை, தேசிய மாணவா் படை, நாட்டுநலப்பணி திட்டம் சாா்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் எழுத்தாளா் எஸ்.ஏ. முத்துபாரதி கலந்து கொண்டு, தோ்தல் எதற்காக, வாக்களிப்பதன் கடமை, 100 சதவீத வாக்குப்பதிவு, வேட்பாளரை தோ்வு செய்யும் முறை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு குறித்துப் பேசினாா். பின்னா் மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பேம் துறைத்தலைவா் பி.பி. கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டுநலப்பணித்திட்ட அலகு-1ன் பொறுப்பாளா் உதவிப்பேராசிரியா் ஆா். ராஜசேகா் வரவேற்று, மாணவா்களுக்கான உறுதிமொழியை வாசித்தாா். நாட்டுநலப்பணித்திட்ட அலகு-2ன் பொறுப்பாளா் உதவிப்பேராசிரியா் பி. முருகன் நன்றி தெரிவித்தாா்.

    தோ்தல் ஆணையத்தின் இதழுக்கு மாணவா்களின் படைப்புகள் இணையவழியில் அனுப்பிவைக்கப்பட்டன. உதவிப் பேராசிரியா்கள் வேல்மதி, அனிதா ரேச்சல் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

    ×