search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ducati scrambler"

    டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிஷன் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    உலகம் முழுக்க டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடல் மொத்தத்தில் 800 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பாஸ்ட்-ஹவுஸ் மற்றும் டுகாட்டி நிறுவனங்களின் கூட்டணியை கொண்டாடும் வகையில் லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் லிமிடெட் எடிஷன்

    இந்த மாடலில் 803சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கயபா சஸ்பென்ஷன், ஆப்-ரோடு சார்ந்த பூட் பெக், கழற்றக்கூடிய ரப்பர் பேட்கள், பிளாக் நிற ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
    டுகாடி இந்தியா நிறுவனம் 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Ducati



    டுகாடி இந்தியா 2019 ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ.7.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டுகாடி ஸ்கிராம்ப்ளர் ஐகான், ஸ்கிராம்ப்ளர் ஃபுல் திராட்டில் மற்றும் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2019 டுகாடி ஸ்கிராம்ப்ளர் மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிதாக டேன்க் பேனல்கள், புதிய எக்சாஸ்ட் மற்றும் டி.ஆர்.எல்.கள் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் எக்ஸ் வடிவம் கொண்ட மோடிஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல்களுடன் என்ஜின் இம்முறை பிளாக் அவுசட் செய்யப்பட்டுள்ளது.



    புதிய ஸ்விட்ச்கியர் வழங்கப்பட்டிருப்பதால் தற்போதைய மாடலை விட புதிய மோட்டார்சைக்கிளில் அதிகளவு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. லீவர்களும் புதிதாக வழங்கப்பட்டு, அவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ். அம்சம் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

    இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிள்களிலும் 803சிசி, ஏர்-கூல்டு, L-ட்வின் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 73 பி.எஸ். @8250 ஆர்.பி.எம். மற்றும் 67 என்.எம். டார்க் @7570 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    ×