search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB officials"

    • பல்வேறு பயிர் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையின் விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க அப்பகுதிக்கு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம், வரபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயத்திற்கு அப்பகுதி வழியே செல்லும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் தண்ணீர் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் வாய்க்கால் அருகே உள்ள விவசாய நிலங்களில் மோட்டார் வைத்து அருகே உள்ள கிணறுகளில் விடுவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து பி.ஏ.பி. வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாய கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனை நிறைவேற்றும் வகையில் கேத்தனூர் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய நாராயணன் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சில மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க அப்பகுதிக்கு சென்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டும், சிறை பிடித்தும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மின் இணைப்பை துண்டிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளின் மின் இணைப்பையும் துண்டித்துக் கொள்ளுமாறு கூறி அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியை நிறுத்தி துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இயற்கை ஆதாரமான மழை நீரை கருத்தில் கொண்டே பல்வேறு பயிர்சாகுபடிகளை இதுவரை செய்து வருவதாகவும் இதுபோன்ற மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை மின்வாரிய அதிகாரிகள் கைவிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும் அதனை நம்பி வாழ்கிற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×