search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electra Stumps"

    • ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்ப்கள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
    • பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்ப்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    நவீன யுகத்தில் கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பை மறுபரிசலனை செய்யக்கூடிய டிஆர்எஸ் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மேலும் ஸ்னிக்கோ மீட்டர் முதல் லேட்டஸ்ட்டாக ஐசிசி அறிமுகப்படுத்திய டைமர் வரை கிரிக்கெட்டில் முடிவுகளை துல்லியமாக வழங்குவதற்காக தற்போது ஏராளமான டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் தற்போது எலக்ட்ரா ஸ்டெம்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பேஷ் தொடரில் ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்புகள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. ரசிகர்களை கவர்வதற்காகவும் பந்து ஸ்டெம்பு மீது படுவதை நன்றாக அறிவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அது நல்ல வரவேற்பை பெற்றதால் ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2014 முதல் தற்போது அனைத்து வகையான போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5 வெவ்வேறு நிகழ்வுகளின் போது 5 வெவ்வேறு வகையான மின் விளக்குகள் எரிந்து சிக்னல் கொடுக்கும்.

    முதலாவதாக இந்த ஸ்டம்பில் பந்து படும் போது சிவப்பு மற்றும் நெருப்பு நிறத்திலான வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். 2-வதாக பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போது இந்த ஸ்டெம்புகள் பச்சை, ஊதா போன்ற பல்வேறு நிறங்களில் வண்ண வண்ணமாக மாறி மாறி எரிந்து சிக்னல் கொடுக்கும். 3-வதாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும் போது இந்த ஸ்டெம்ப்களில் அதே போன்ற வண்ணங்கள் மேலும் கீழுமாக சென்று சிக்னல் கொடுக்கும்.

    அதை விட 4-வதாக பவுலர்கள் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து நோபால் வீசும் போது இந்த ஸ்டெம்புகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மேலும் கீழுமாக சென்று உடனடியாக சிக்னல் கொடுக்கும். பந்து வீச்சாளர்கள் நோபால் வீசுவதை கண்டறிய இந்த ஸ்டெம்ப்புகள் சென்சார்களை பயன்படுத்தி நோ-பால் வீசுவதை கண்டறிந்து உடனடியாக மின்விளக்குகளால் எரிவதுடன் மைதான ஒலிபெருக்கியில் சிக்னலையும் ஏற்படுத்தும்.

    அதனால் அம்பயர்களை விட துல்லியமாக செயல்படக்கூடிய இந்த ஸ்டெம்புகள் ஓவர்களுக்கு இடையே ஊதா, நீல வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். அப்படி 5 சிறப்புகளைக் கொண்டுள்ள இந்த ஸ்டெம்புகள் மைதானத்தில் தூரத்தில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களை கவர்வதற்காகவும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×