என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "electric rail service"
- சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.
- திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து.
சென்னை,
அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 18-ந்தேதி காலை 10, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு.
- கடற்கரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் திங்கள்கிழமை (16-ந்தேதி) ரத்து செய்யப்படும்.
கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 16-ந் தேதி ரத்து செய்யப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூருக்கு இரவு 8.05 மணிக்கு மேல் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
அதுபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரெயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்கள் ரத்து.
- 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தாம்பரம் ரெயில்வே யார்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சில விரைவு ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் சில வெளி மாநில ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.
எனவே இந்த ரெயில்களின் மாற்றங்கள், புறப்படும் இடம், நேரம் பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த உதவி எண்கள் வருமாறு:-
044-25354995, 044-25354151 இந்த எண்களில் 24 மணிநேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை இந்த உதவி எண்கள் செயல்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9.30, 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 10.20, 11.20, 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையேயும் இன்று மற்றும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை- பொன்னேரி காலை 5.30 மணிக்கும், பொன்னேரி- கடற்கரை காலை 7 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி காலை 8.50 மணி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே 2 நாட்களும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 9.55 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.25 மணி ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 1.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.25, 1.25 மணி ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 1.35, 3.15 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை மதியம் 12.40 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்