என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electric Train Service Change"
- அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகுதான் வழக்கமாக ரெயில் சேவை ஞாயிறு கால அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வயதான முதியோர் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி சானடோரியம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆதங்கத்துடன் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாகவே தாம்பரம்-கடற்கரை ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
பராமரிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு-பகலாக சரி செய்ய வேண்டியது தெற்கு ரெயில்வேயின் பொறுப்பாகும். ஆனால் இதை தெற்கு ரெயில்வே கடைபிடிப்பதில்லை.
பல மாதங்களாக பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்கின்றனர். எத்தனை மாதத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை பொது மக்களுக்கு தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரெயில்களை ரத்து செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே பராமரிப்பு பணிகள் எவ்வளவு நடந்து உள்ளது? என்பதை மக்களுக்கு விளக்குவதுடன் இந்த பணிகள் இன்னும் எத்தனை மாதத்துக்கு நடைபெறும் என்பதையும் தெற்கு ரெயில்வே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை முதல் 14-ந் தேதி வரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு.
சென்னை:
ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 14-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி இடையிலான ரெயில் சேவையினை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட் டுள்ள நேரங்களில் ரெயில் போக்குவரத்து சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும் மற்றும் கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையில் மட்டுமே இயக்கப்படும்.
எனவே 14-ந் தேதி வரை சென்னை மாநகர பேருந்து போக்குவரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்துகள் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும் மீண்டும் செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் இயக்கப்பட உள்ளது.
பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் அனைவரும் தாம்பரம் இரும்புலியூர் பேருந்து நிலையம், இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பல்லாவரம், குரோம் பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம் பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்கு வரத்து ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 175 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை-வேளச்சேரி ரெயில் இன்று காலை 11.30 மணி முதல் மதியம் 3.25 மணி வரையும், வேளச்சேரி-கடற்கரை காலை 11.35 மணி முதல் மதியம் 3.25 வரையும், கடற்கரை-வேளச்சேரி ரெயில் நாளை காலை 11.40 மணி முதல் மதியம் 3.20 மணி வரையும், வேளச்சேரி-கடற்கரை காலை 11.30 மணி முதல் மாலை 3.10 மணி வரையும் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இரவு 11.30 மணி, கடற்கரை-தாம்பரம் இரவு 11.05, 11.30, 11.59 மணி ரெயில்கள், கடற்கரை- தாம்பரம் அதிகாலை 4 மணி ரெயில்கள் இன்றும், தாம்பரம்-கடற்கரை அதிகாலை 4, 4.20, 4.40, 5.15 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு-கடற்கரை இரவு 10.15, 11.10 மணி ரெயில் கள் தாம்பரம்-கடற்கரை வரையும், கடற்கரை- செங்கல்பட்டு அதிகாலை 3.55, 4.40, 5 மணி ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #trainservice
கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9.30 மணி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 8.35 மணி ரெயில் மீஞ்சூர்-சூலூர்ப்பேட்டை இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9 மணி ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணி ரெயில் வில்லிவாக்கம்-பட்டாபிராம் இடையே உள்ள ரெயில் நிலையங்களில் நாளையும், நாளை மறுநாளும் நிற்காது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #Electrictrain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்