search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England FootBall team"

    ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ், பனமாவிற்கு எதிராக 6-1, பார்முலா 1-ல் லெவிஸ் ஹாமில்டன் வெற்றி என இங்கிலாந்துக்கு பொன்னான நாளாக அமைந்தது. #ENGvAUS #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இங்கிலாந்து பனாமா அணியை எதிர்கொண்டது. இதில் கேப்டன் ஹாரி கேன் ஹாட்ரிக் கோலால் 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட் சுற்றை உறுதி செய்தது.

    அதேவேளையில் கிரிக்கெட்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 205 ரன்னில் சுருண்டது.



    பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. 114 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து, ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நேற்று பார்முலா 1 பந்தயத்தில் கனடா கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் மெர்சிடெஸ் பென்ஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கனடா கிராண்ட் ப்ரிக்ஸை வென்றதுடன் ஒட்டுமொத்தமாக இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.



    இதன்மூலம் கால்பந்து, கிரிக்கெட, கார் பந்தயம் என இங்கிலாந்திற்கு நேற்று பொன்னான நாளாக அமைந்தது.
    உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதும் என பெக்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், இந்ததெந்த அணிகள்தான் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று முன்னாள் நட்சத்திர வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் பெக்காம், இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேவிட் பெக்காம் கூறுகையில் ‘‘அர்ஜென்டினா இங்கிலாந்தை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நம்புகிறேன். என்னுடைய தேர்வு எதுவென்றால், அது இங்கிலாந்து அணியாகத்தான் இருக்கும். நான் இங்கிலாந்தை சார்ந்தவன் என்பதாலும், அந்த உணர்ச்சி எனக்கு இருப்பதாலும் இதைச் சொல்கிறேன்.



    உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்து மிகவும் இளம் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. அவர்கள் அதிக அளவில் அனுபவம் பெறவில்லை என்பதால், உலகக்கோப்பையில் அவர்களது பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது’’ என்றார்.



    1966-ம் ஆண்டு மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து, பெக்காம் தலைமையில் 2006-ம் ஆண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×