search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs Pakistan"

    பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

    தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

    டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
    லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானை 174 ரன்னில் சுருட்டியது இங்கிலாந்து. சதாப் கான் 56 ரன்கள் சேர்த்தார். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.



    5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.



    சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் 68 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறி வருகிறது. #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்துள்ளது. 68 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறி வரும் பாகிஸ்தான், 5-வது விக்கெட்டை விரைவில் இழந்தால், முதல் இன்னிங்சில் குறைவாக ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக வாய்ப்புள்ளது.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அந்த அணியில் சாம் குர்ரான் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvPAK #SamCurran #BenStokes #HamstringInjury

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (ஜூன் 1-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சின் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. 



    இந்த தசைப்பிடிப்பின் தாக்கம் சற்று தீவிரமாக உள்ள நிலையில், பென் ஸ்டோக்சுக்கு பதிலாக, சர்ரே அணியின் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம் குர்ரான், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரானின் சகோதரர் ஆவார். #ENGvPAK #SamCurran #BenStokes #HamstringInjury
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த முகமது அப்பாஸ் 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 24-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 64 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    8 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது அப்பாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது அப்பாஸ் 20-வது இடத்திற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.



    மேலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது அமிர் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
    லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அலஸ்டைர் குக் (70) மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி (50), ஆசாத் ஷபிக் (59), பாபர் அசாம் (68), ஷதாப் கான் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 114.3 ஒவர்கள் விளையாடி 363 ரன்கள் குவித்தது.

    முதல் இன்னிங்சில் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட்டை (68) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததது.


    அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்

    6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்று தத்தளித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் உடன் பெஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி மேலும் 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானுக்கு 150 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கலாம் என்று நினைப்புடன் இங்கிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

    பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் தொடர்ந்து விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய 8-வது பந்தில் பட்லர் மேலும் ஒரு ரன் எடுத்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 80-வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார்

    அடுத்த ஓவரில் மார்க்வுட் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் டக்அவுட்டில் வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் முகமது அமிர் பெஸ்-ஐ க்ளீன் போல்டாக்கினார். இதனால் இங்கிலாந்து 82.1 ஓவரில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    சேஸிங் செய்த சந்தோசத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    64 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 66 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்து செல்லும்போது தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா நான்கு விக்கெட்டுக்களும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 1-ந்தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
    தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அலஸ்டைர் குக் அறிமுகமானார். இந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த டெஸ்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை.



    தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அவரின் 155-வது டெஸ்ட். அதற்குப்பிறகு தொடர்ச்சியாக 153 டெஸ்டில் விளையாடியுள்ளார். 155 டெஸ்டில் 12078 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 294 ரன்னாகும்.

    இடது கை பேட்ஸ்மேன் ஆன ஆலன் பார்டர் 156 டெஸ்டில் 27 சதத்துடன் 11174 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 24-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணிக்காக 18 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் சுமார் ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை.

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வரும் 24-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஸ் பட்லருக்கு இடம் கிடைத்துள்ளது.



    பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜானி பேர்ஸ்டோவ், 4. டாம்  பஸ், 5. ஸ்டூ்வர்ட் பிராட், 6. ஜாஸ் பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. தாவித் மலன், 9. பென் ஸ்டோக்ஸ், 10. மார்க் ஸ்டோன்மேன், 11. கிறிஸ் வோக்ஸ், 12. கிறிஸ் வுட்.

    27 வயதாகும் பட்லர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடைசி 6 போட்டியில் ஐந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
    ×