search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enriched Biscuits"

    • 6 மாத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
    • மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளார் என கூறினார்.

    விழுப்புரம்.ஜூன்.12-

    தமிழகத்தில் முதல் முதலாக 6 மாத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், செஞ்சி மஸ்தான் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தொடங்கி ைவத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரத்தில் திரெளபதி அம்மன் கோவில் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தனர். இதில் எம்எல்ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவகுமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி, பிரபு மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி, விழுப்புரம் சேர்மன் சித்திக் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்முடி நிருபர்களுக்கு கூறியதாவது:-

    விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் 1,40,000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 4,348 குழந்தைகளுக்கு ஊட்டசத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான் அரசியல் பேச வில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் சண்முகம் என்பவரது வீட்டில் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக மாறும் என்று கூறினார். கடைசியாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நன்றி கூறினார்.

    ×