என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Environmental awareness"
- மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மெளன நாடகத்தை அரங்கேற்றினர்.
- மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக உதவி நிலைய மேலாளர் (வணிகம்) சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய சூழலில் சுற்றுப்புறத்தை அனைவரும் காக்க வேண்டும், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் நோய் இல்லாமல் நாம் வாழமுடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மரம் நடவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். பல உயிரினங்களுக்கு வாழ்க்கை தரும் மரங்களை வெட்டக்கூடாது. நடவு செய்த மரங்களை பராமரிக்க தவறக்கூடாது என்றார்.
முதன்மை வணிக ஆய்வாளர் இளங்கோ, சேலம் ெரயில்வே கோட்ட பயனாளர்கள் அறிவுரை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிறகு மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மெளன நாடகத்தை அரங்கேற்றினர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்தனர். மாணவ செயலர்கள் அருண்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சு கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து வருகிறது.
மேலும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பேரழிவுகளும் ஏற்படுகின்றன. எனவே கடந்த 1986-ம் ஆண்டு முதல் நச்சு வாயுவை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் மூலம் ஓசோன் படலம் மேலும் பாதிக்கப்படையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மெல்ல மெல்ல மூடி சீரடைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற 2060-ம் ஆண்டில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்தது போன்ற பழைய நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டிற்குள் ஓசோன் படலத்தின் ஓட்டை 1 முதல் 3 சதவீதம் வரை குறைந்து சீரடைந்துள்ளது.
பூமியின் வடபகுதி மற்றும் மத்திய பகுதியில் 2030-ம் ஆண்டிலும், தென்பகுதியில் 2050-ம் ஆண்டிலும், அண்டார்டிகாவில் 2060-ம் ஆண்டிலும் முற்றிலும் சீரடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்கள் குறிப்பாக குளோரோ, புளோரோ கார்பன்களை தடை செய்ததால் தான் இத்தகைய முன்னேற்றமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. #UN #Ozonelayer
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்