என் மலர்
நீங்கள் தேடியது "Export of textiles"
- கடந்த ஆண்டில் உள்நாட்டில் நிலவிய உச்சபட்ச விலை உயர்வால் பருத்தி இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்தது.
- பருத்தி, பஞ்சு, நூலிழை போன்றவற்றை, இத்தகைய நாடுகள் நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கி விடுகின்றன.
திருப்பூர்:
நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி, பஞ்சு, பருத்தி நூலிழை மற்றும் ஆடைகளுக்கு, சர்வதேச சந்தைகளில் வரவேற்பு அதிகம். சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகள் தரமான பருத்தி உற்பத்தியில் இந்தியாவை வெற்றி கொள்ள முடியவில்லை.
பருத்தி சீசன் துவங்கியதும், பருத்தி, பஞ்சு, நூலிழை போன்றவற்றை, இத்தகைய நாடுகள் நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கி விடுகின்றன.கடந்தாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் பின்னலாடை தொழில் உட்பட, ஜவுளித் தொழில்துறையினர் அதிக விலை கொடுத்து பஞ்சை வாங்கினர்.
முந்தைய நிதியாண்டில்(2021-22) 15 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்த பருத்தி நூலிழை துணி, ஜவுளி பொருள் இறக்குமதி கடந்த நிதியாண்டில்(2022-23) 21 ஆயிரத்து 11 கோடி ரூபாயாக அதிகரித்தது. முந்தைய ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாக நடந்த பருத்தி , கழிவு பஞ்சு இறக்குமதி கடந்த நிதியாண்டில் 11 ஆயிரத்து 505 கோடியாக அதிகரித்தது.
கடந்த ஆண்டில் உள்நாட்டில் நிலவிய உச்சபட்ச விலை உயர்வால் பருத்தி இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்தது. உள்நாட்டு தேவைக்கான பஞ்சு தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதன் மூலம், நடப்பு நிதியாண்டில் இறக்குமதியை குறைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்த முடியும் என்கின்றனர் திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையினர்.