search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye Massage"

    • கண் தான் முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை.
    • கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும்.

    கண்கள் தான் ஒருவரது முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை. மிகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் அமைந்திருக்கும் கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கண்களுக்கு ஊறுவிளைவிக்கத்தக்க செயற்கை ஒளியை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது. கணிப்பொறியில் பணி செய்வதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதுவுமே நம் கண்களைப் பெரிதும் சோர்வடையச் செய்கின்றன.

    நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கு ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம் என்று பார்க்கலாம்.

     மசாஜ்:

    ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதன்பின் வேப்ப எண்ணெயை 3 முதல் 4 துளி வரை கலந்து கொள்ளலாம். இதனை கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். இவ்வாறு செய்வதினால் கண்களில் உள்ள சுருக்கம் நீங்க ஆரமிக்கும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும்.

    மற்றொரு முறைப்படி ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2 ஸ்பூன், அவோகேடா எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து தூங்கச் செல்லும்போது இதனை நன்றாக தடவி விட்டு படுக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதனை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண் சுருக்கம், கண் சோர்வு ஆகியவை நீங்கும்.

     கண்களுக்கான பயிற்சி

    ஒரு பென்சில் அல்லது பேனாவை வலது கையினால் எழுதுமுனை மேல் நோக்கியவாறு கைக்கெட்டிய தூரத்தில் பிடியுங்கள். மெல்ல மெல்ல அதைக் கண்களுக்கு அருகே எழுதுமுனை இரண்டாகத் தெரியும் வரை கொண்டு வாருங்கள் அந்த அளவில் நிறுத்திச் சிறிது நேரம் பென்சிலின் முனையை உற்று நோக்குங்கள். பின்னர் பென்சிலை கண்களுக்கு அருகில் இருந்து அகற்றிப் பழைய நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இதுபோல் நான்கைந்து முறை செய்யுங்கள்.

    கண்சோர்வை நீக்க மற்றுமொரு பயிற்சி. ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்து கொண்டு முழங்கைகள் இரண்டையும் மேஜையில் ஊன்றிக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் இறுகப் பொத்திக்கொள்ளுங்கள். தலையைத் தொய்வாக வைத்து இரண்டு கைகளாலும் தாங்கிக் கொள்ளுங்கள். இதேபோல் பத்து நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களில் இருந்து கைகளை விலக்குங்கள். இதுபோல் தினமும் பல முறை செய்யலாம்.

    ×