search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fakhar zaman"

    • பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது.
    • 2020 - 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை.

    பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிராக அந்த அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது.

    அந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில வருடங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் பாபர் அசாம் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் 2019-க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போதும் விராட் கோலியை இந்தியா கழற்றி விடவில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபர் அசாமை கழற்றி விட்டு பாகிஸ்தான் தவறு செய்துள்ளதாக பாகிஸ்தான் வீரர் ஃபகர் சமான் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது. 2020 - 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை. அந்த காலகட்டங்களில் அவர் முறையே 19.33, 28.21, 26.50 என்ற சுமாரான சராசரியையே கொண்டிருந்தார்.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய முதன்மை பேட்ஸ்மேனை சொல்லப்போனால் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த வீரரை ஒதுக்குவது அணியின் மற்ற வீரர்களுக்கு எதிர்மறையான செய்தியைக் கொடுக்கும். பதற்றம் எனும் பொத்தானை அமுக்குவதற்கு நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நம்முடைய வீரர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு பதிலாக அவர்களுக்கு பாதுகாப்பும் வாய்ப்பும் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    என்று ஃபகர் சமான் கூறினார்.

    • டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதில் பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    டி 20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 314 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நெதர்லாந்து 298 ரன்கள் எடுத்து போராடி தோற்றது.

    ரோட்டர்டாம்:

    நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ரோட்டர்டாம் நகரில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 28 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு நெதர்லாந்து வீரர்கள் சவாலாக ஆடினர்.

    கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் மற்றும் டாம் கூப்பர் தலா 65 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. பகர் சமான் 12 ரன்னுடனும், பாபர் ஆசம் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது பதற்றத்தை எதிர்கொள்ளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் சமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விரைவில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். என்னை பொறுத்தவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும்.



    நாங்கள் இந்தியாவை விட சற்று முன்னணியில் இருக்கிறோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.

    விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்கு கடும் சவால் கொடுக்கும். ரசிகர்கள் சிறந்த ஆட்டத்தை கண்டுகளிக்க இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அதிரடி வீரர் பகர் சமானை சமாளிக்க இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மைக் ஹசி ஆலோசனை வழங்கியுள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆகியவற்றிற்கு இடையிலான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

    இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் பகர் சமான். இவர் அடித்த சதத்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் பகர் சமான் தற்போது சூப்பர் ஃபார்மில் உள்ளார். கடந்த வாரம் முடிவடைந்த ஜிம்பாப்வே தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதில் சதம், இரட்டை சதம் என துவம்சம் செய்து, அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பகர் சமான் சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன மைக் ஹசி பகர் சமானை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘டைட் லைன் மற்றும் லெந்த் பந்துகளை தொடர்ச்சியாக வீசி நெருக்கடியை உண்டாக்க முயற்சிக்க வேண்டும். சில டாட் பால் வீசி நெருக்கடி கொடுத்தால், அவர் விரும்புவதை விட முன்கூட்டியே பெரிய ஷாட்டுகள் அடிக்க முயற்சி செய்வார்.

    அதேபோல் பந்துகளின் வேகத்தை குறைத்து, அதிகரித்து வீச வேண்டும். பகர் சமான் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ரன் குவித்து ஃபார்மில் உள்ளார் என்ற நினைத்து விடக்கூடாது. இந்தியாவிற்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்து வெகுநாட்கள் ஆகவில்லை.



    அட்டங்கிங், விரைவாக ஸ்கோர் அடித்தல் போன்ற வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம். இவர் மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் பந்தை விரட்ட முடியும். பந்து வீச்சாளர்களில் குறைந்த அளவு தவறு செய்பவர்கள் மிகவம் குறைவானர்களே.

    ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அல்லது பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளும் சமீப காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் சிறந்த அணிகள்’’ என்றார்.
    பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை இன்று படைத்துள்ளார். #FakharZaman
    புலவாயோ:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி இன்று புலவாயோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக இமால் உல் ஹக் மற்றும் பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர். இதுவரை பகர் சமான் 17 இன்னிங்ஸ்களில் ஆடி 980 ரன்களை எடுத்திருந்தார்.

    இன்று நடைபெற்ற போட்டியில் அவர் 20 ரன்களை கடந்த போது, குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். 

    இவருக்கு அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜோனாதன் ட்ராட், குயிண்டான் ட் காக், பாபர் அசாம் ஆகியோர் 21 இன்னிங்ஸ்களில் ஆயிரன் ரன்களை கடந்துள்ளனர்.

    குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த பகர் சமானுக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FakharZaman
    பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரின் 21 ஆண்டு கால சாதனையை 28 வயதான இடக்கை ஆட்டக்காரர் பஹார் ஜமான் தகர்த்துள்ளார். #FakharZaman #SaeedAnwar
    சயீத் அன்வர், 1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தான் வீரரின் தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. அந்த 21 ஆண்டு கால சாதனையை 28 வயதான இடக்கை ஆட்டக்காரர் பஹார் ஜமான் தகர்த்துள்ளார்.



    இரட்டை செஞ்சுரி விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் பஹார் ஜமானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பஹார் ஜமான் சதம் அடித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டது நினைவு கூரத்தக்கது. #FakharZaman #SaeedAnwar
    4-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 155-ல் சுருட்டி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 155 ரன்னில் சுருண்டது.



    இந்த அணியின் டொனால்டு டிரிபானோ அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். சிகும்புரா 37 ரன்களும், பீட்டர் மூர் 20 ரன்களும், மசகட்சா 22 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சாரபில் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #ZIMvPAK #FakharZaman #ShadabKhan #ImamulHaq
    ஜிம்பாப்வே அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 399 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தது பாகிஸ்தான். #PAKvZIM
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பாகிஸ்தான் இதற்கு முன்பு 385 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அது தற்போது 399 ரன்னாக உயர்ந்ததுள்ளது. ஒருநாள் போட்டியில் எந்தவொரு தொடக்க ஜோடியும் முச்சதத்தை தொட்டது கிடையாது. முதன்முறையாக பகர் சமான் - இமாம்-உல்-ஹக் ஜோடி 304 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.



    கிறிஸ் கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதன்பின் தெண்டுல்கர் - டிராவிட் 331 ரன்களும், கங்குலி - டிராவிட் 318 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இந்த ஜோடி 304 ரன்கள் குவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் இதுதான். இதற்கு முன் சோஹைல் - இன்சமாம் உல் ஹக் ஜோடி 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
    இந்தியாவை கதிகலங்க வைத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பகர் சமான் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இருவரும் சதம் அடித்தனர். இமாம்-உல்-ஹல் 112 பந்திலும், பகர் சமான் 92 பந்திலும் சதம் அடித்தனர். இந்த ஜோடி 42 ஓவரில் 304 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. இமாம்-உல்-ஹக் 122 பந்தில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆசிப் அலி களம் இறங்கினார். இவரும் அதிரடியாக விளையாடினார். இவர் 22 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். பகர் சமான் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதில் 148 பந்தில் 24 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். இவர் 156 பந்தில் 210 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.



    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் இரட்டை சதத்தை தொட்டவர் என்ற சாதனையை பகர் சமான் படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து, இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS
    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    பகர் சமான் (91), சோயிப் மாலிக் (43) ஆகியோரின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.



    1990-ம் ஆண்டு சார்ஜாவில் ஆஸ்ட்ரால் - ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, வங்காள சேதம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    அதன்பின் தற்போதுதான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×