search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Welfare Association"

    • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டப்படி மறுபடியும் மல்பரி விவசாயத்திற்கும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
    • இயற்கை உரத்திற்கு மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மத்தியப்பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விரிவாக்க மையம் முன்பு கவன ஈர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    உடுமலை அன்சாரி வீதி யில் உள்ள மத்தியப்பட்டு வளர்ப்பு விரிவாக்கம் மையம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு சங்க ஆலோசகர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் எம். செல்வராஜ் மாநிலச் செயலாளர் என். பொன்னுச்சாமி மாநில பொருளாளர் வி. கனகராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.புதிய வீரியம்மிக்க தரமான முட்டைகள் வழங்க வேண்டும். பட்டுக்கூடுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு கிலோ கூட்டிற்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். செயற்கை உரத்திற்கு மானியம் வழங்குவது போல் இயற்கை உரத்திற்கு மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டப்படி மறுபடியும் மல்பரி விவசாயத்திற்கும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். காலசூழலுக்குஏற்ப விழிப்புணர்வு கூட்டங்களை விவசாயிகளுக்கு முன்கூட்டியே அறிவித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டுக்கூடு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் நாச்சிமுத்து, குமரவேல் ,நடராஜ் உட்பட தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாய நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    ×