search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Federation Cup"

    • நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
    • 3 ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

    போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

    இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
    • ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், இந்தியாவின் சந்தோஷ் குமார் கலந்து கொண்டார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், இந்தியாவின் சந்தோஷ் குமார் கலந்து கொண்டார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றவரான அவர், இந்த போட்டியில் 50.04 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து, முதல் இடம் பெற்றார்.

    இந்த பிரிவில், 48.80 வினாடிகள் என்பது இந்தியாவின் தேசிய சாதனையாக உள்ளது. 2019-ம் ஆண்டு பாட்டியாலா நகரில் நடந்த பெடரேசன் கோப்பை போட்டியின்போது, அய்யாசாமி தருண் என்பவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    இந்த போட்டியில், நிகில் பரத்வாஜ், 50.92 வினாடிகளில் இலக்கை அடைந்து, வெள்ளி பதக்கம் வென்றார். தவால் மகேஷ் உதேகர் 51.13 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

    ×