என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Female Fetus"
- அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.
- விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக கருக்கலைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.
இதைதொடர்ந்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கடந்த 5-ந் தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் நோய் கண்டறியும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் பெண் கரு ஒன்று கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலின நிர்ணயம் மற்றும் சட்ட விரோத கருக்கலைப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் 2 செவிலியர்கள், 1 லேப் டெக்னீஷியன் மற்றும் 1 துப்புரவு பணியாளர் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.