search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female gender discrimination"

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.
    கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை 6 கோடியை தொட்டுவிட்டது என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல். 2014-ம் ஆண்டு வெளியான ‘இந்தியா டிஸ்கானர்‘ என்ற தனது புத்தகத்தில் இதை அம்பலப்படுத்தி உள்ளார்.

    இது இங்கிலாந்து மொத்த மக்கள்தொகை அளவுக்கு நிகரானது. பெண்கள் இனம் அழிந்து கொண்டிருப்பதை முதலில் பதிவு செய்தவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென். 1990-ம் ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடி பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக அவர் முதன்முதலில் குறிப்பிட்டார்.

    இன்று, அது இந்தியாவில் மட்டும் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்? நமது மக்கள் தொகை கணக்கெடுப்பை புரட்டிப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் 1.2 கோடி பெண் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணம் அடைகின்றனர்.

    பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. இன்றைக்கும் பெண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும், ஆண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது நமது வழக்கத்தில் இருக்கிறது. முந்தைய தலைமுறை வரை இந்த பாகுபாடு வெளிப்படையாகவே இருந்து வந்தது.



    பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமைப்பு உலகிலேயே அதிக அளவிலான பாலினப் பாகுபாடு இந்தியாவில் இருப்பதாக சொல்கிறது. பெண் குழந்தைகள் இறப்புக்கான மற்றொரு காரணம் சிசுக்கொலை.

    ஸ்கேன் சோதனை செய்து ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என்று சொல்வது குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கருக்கலைப்பு செய்வது இப்போதும் நடந்து வருகிறது. ஆண் குழந்தை மோகத்தால், பிறந்த பிறகும் பெண் குழந்தைகளைக் கொல்வது நடக்கிறது. இந்த விகிதாசார குறைபாடுகளை வெறும் எண்களாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது.

    இது நேரடியாக பல விதத்தில் பெண்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. கலாசாரம், பண்பாடு என்ற பெயர்களில் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை தடுக்க ஆக்கபூர்வமான எந்த செயல்பாட்டையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உலக வங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்கள் சிறுபான்மையினராக மாறும்போது நாட்டின் திட்டங்களிலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.

    ×