search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fielding Coach"

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
    • அதை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

    இதனையடுத்து பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. அவர் கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். இதனை தொடர்ந்து பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் பந்து வீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் பரிசீலனையில் உள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் கவுதம் கம்பீர் வினய் குமாரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    இந்நிலையில் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட்டை நியமிக்க பிசிசிஐ-யை வலியுறுத்தி உள்ளார். அவர் முன்னாள் நெதர்லாந்து அணியின் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரும் ஆவார்.

    இது அனைத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், கம்பீரின் உதவியாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தவர்கள் அப்படியே இந்திய அணியில் இணைவார்கள்.

    ×