என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fisherman's Day"
- உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
- கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தூத்துக்குடி:
மீனவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் தூத்துக்குடி ஸ்நோ ஹாலில் மீனவர் தின விழா நடபெற்றது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து அவர் அங்கிருந்து மீனவர் தின விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றார்.
விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மீனவ சமுதாய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், மீனவ சமுதாய தலைவர்களின் சேவைகளையும் பாராட்டி விருது வழங்கினார்.
தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதனை முடித்து கொண்டு பிற்பகல் பீச் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் விசைப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.