என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "food inflation"
- இந்தியாவில் உணவு பணவீக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்.
- பருவமழை காரணமாக உணவு பணவீக்கத்தில் மாற்றம் ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால், நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதே இதற்காக காரணமாக கூறப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை சீராக இருந்ததால் கோடையில் விதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது. நீர்த்தேக்கம் அதிகரித்து இருப்பதால் தற்போதைய காரிஃப் மற்றும் வரவிருக்கும் ராபி பயிர் உற்பத்திக்கு நல்ல விளைச்சலை கொடுக்கும்.
இதன் காரணமாக வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய தொடங்கும் என்று இந்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலையில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.4 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு உணவு பொருட்களின் விலை முந்தைய உச்சத்தில் இருந்து குறைந்தது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சில்லறை பணவீக்கத்தில் கிட்டத்தட்ட பாதி பங்கு வகிக்கும் உணவு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.36 சதவீதமாகவும், ஜூலையில் 5.42 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தேவை அதிகரித்து இருப்பது இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவித்துள்ளது. எனினும், இறக்குமதியும் அதிகரித்து இருக்கிறது.
- பலரக காய்கறிகளை கொண்டு விதவிதமான பதார்த்தங்கள் தாலிக்களில் இடம்பெறும்
- அசைவ தாலிகளில் பருப்பிற்கு மாற்றாக பிராய்லர் சிக்கன் துண்டு வைக்கப்படும்
வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவகங்களில் மதிய நேரங்களில் மக்களால் விரும்பி உண்ணப்படும் பலவகை உணவுகளில் "தாலி" எனப்படும் முழு சாப்பாடு முக்கியமான ஒன்று.
இதில் பல ரக காய்கறிகளை கொண்டு விதவிதமாக செய்யப்படும் பதார்த்தங்களும், அளவில்லாத சாதமும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஒரு வருட காலகட்டத்தில் "சைவ தாலி" (vegetarian thaali) உணவின் விலை முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக, நிறுவனங்களுக்கான தரக்குறியீடுகளை வழங்கும் "க்ரிசில்" (CRISIL) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் "அசைவ தாலி" (nonvegetarian thaali) சாப்பாட்டின் விலை 13 சதவீதம் குறைந்துள்ளது.
"ரோட்டி ரைஸ் ரேட்" (Roti Rice Rate) எனும் பெயரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கைக்காக, பல சைவ மற்றும் அசைவ உணவகங்களில் கடந்த ஓராண்டுகளாக அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் மெனுக்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஒரு "சைவ தாலி" மெனுவாக, ரோட்டி (Roti), வெங்காயம், தக்காளி, உருளை, அரிசி, பருப்பு (dal), தயிர் மற்றும் பச்சைக்காய்கறி கலவை (salad) உள்ளிட்டவை இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டது.
ஒரு அசைவ தாலி மெனுவாக, சைவ தாலியில் உள்ளவைகளுடன் பருப்பிற்கு பதிலாக "பிராய்லர்" கோழி உள்ள மெனு கணக்கிடப்பட்டது.
இந்த ஆய்வின்படி, 2023 ஜனவரி மாதம் ரூ.26 என இருந்த ஒரு சைவ தாலி சாப்பாட்டின் விலை, 2024 ஜனவரி மாதம் விலை ரூ.28 என உயர்ந்துள்ளது.
ஆனால், 2023 ஜனவரி மாதம் ரூ.59 என இருந்த ஒரு அசைவ தாலி சாப்பாட்டின் விலை, 2024 ஜனவரி மாதம் ரூ.52 என குறைந்துள்ளது.
தக்காளி, வெங்காயம், அரிசி, பருப்புகள் ஆகியவற்றின் விலையேற்றமே சைவ தாலியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என ஆய்வு குறிப்பிடுகின்றது.
ஆனால், பிராய்லர் கோழியின் பெருக்கம் காரணமாக அவற்றின் சந்தை விலை 26 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் அசைவ தாலியின் விலையை உணவக உரிமையாளர்கள் குறைத்தனர்.
இதன் மூலம் உணவு பொருட்களுக்கான விலைவாசி (food inflation) குறையவில்லை என தெரிகிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்