என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » foreign currency seized
நீங்கள் தேடியது "foreign currency seized"
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:
அப்போது 1,50,700 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் ) அவர் மறைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்த அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.
இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
டெல்லி விமான நிலையத்தில் நேற்று ஒருவர் ஹாங்காங் செல்வதற்காக காத்துக்கொண்டு இருந்தார். சந்தேகத்துக்கிடமான அவரது நடவடிக்கைகளால் அவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆப்கானிஸ்தான் நாட்டு ஆசாமியிடம் இருந்து 10.81 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
திருவனந்தபுரம்:
துபாயில் இருந்து கேரளவின் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியால் என வெளிநாட்டு பண நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
அவரிடம் இருந்த சுமார் 10.61 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பண நோட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறையினர் கூறுகையில், இந்த நிதியாண்டில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக சுமார் 254 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சுமார் 87 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
×

X