search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open 2024"

    • கால்இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.
    • காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார்.

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பிய வீரர் ஜோகோவிச் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிக்கனியை பறித்தார். இதனால் கால்இறுதியில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.

    இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து நேற்று விலகினார். நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு பட்டத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்பாக வெளியேறி விட்டதால், நம்பர் ஒன் இடத்தையும் இழக்கிறார்.

    2-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சினெர் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார். வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் 22 வயதான சினெர் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவார். டென்னிஸ் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்க போகும் முதல் இத்தாலி வீரர் இவர் தான்.

    • கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
    • அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    அதேபோல மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி சபலெங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார்.
    • 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.

    பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.

    இதேபோல செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை ஒரு புள்ளி கூட எடுக்காமல் இழந்த அவர் அடுத்த 2 செட்டுகளை வென்றார். இதன் மூலம் 0-6, 7-5, 7-6 (8) என்ற செட் கணக்கில் ஓல்கா டானிலோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
    • முதல் செட்டை லக்ஷ்யா சென் கைப்பற்றினார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சாருடன் மோதினர். முதல் செட்டை சென் கைப்பற்றினார். அடுத்த 2 செட்டை அபாரமாக விளையாடிய குன்லவுட் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 22-20, 21-13, 21-11 என்ற கணக்கில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தோல்வியடைந்தார்.

    ×