search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gangayam cattle market"

    • காங்கயத்தை அடுத்த கண்ணபுரத்தில் தற்போது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • பழையகோட்டையில் மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவில்லை.

    காங்கயம்:

    காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, அறச்சலூா், காங்கயம், சென்னிமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாரம்தோறும் சுமாா் 200 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்.

    இந்நிலையில், காங்கயத்தை அடுத்த கண்ணபுரத்தில் தற்போது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு பெரிய அளவிலான மாட்டுச் சந்தை கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பழையகோட்டையில் மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவில்லை.

    இதுகுறித்து சந்தை ஏற்பாட்டாளா்கள் கூறுகையில், கண்ணபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அங்கு மாட்டுச் சந்தை தொடங்கியுள்ளது. இந்த மாட்டுச் சந்தை 2 வாரங்கள் வரை நடைபெறும். இதனால் பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் சந்தை செயல்படவில்லை. கண்ணபுரம் திருவிழா முடிந்தபிறகு வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமைகளில் பழையகோட்டை சந்தை செயல்படும் என்றனா். 

    ×