என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganja chocolate"
- பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
- குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விளங்குகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள், வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து, ரவுடிகளாக வலம் வருகின்றனர்.
நாள் முழுவதும் போதையில் மிதக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே கொடூரமான குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி. சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கஞ்சா விற்பனை கும்பலை தேடி தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
வடமாநிலங்கள் பலவற்றில் குடிசை தொழில்போல் கஞ்சா சாக்லேட்களை தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் தொழிலாளர்கள் மொத்தமாக கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து, ஒரு சாக்லேட் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை சாப்பிடுபவர்கள் 3 மணி நேரத்திற்கு போதையில் மிதக்கின்றனர். குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.
சாதாரண பெட்டிக்கடையில் மற்ற சாக்லேட்டுகளுடன் கஞ்சா சாக்லேட்டும் சர்வ சாதாரணமாக டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து புதுச்சேரி போலீசார் பெட்டி கடைகளில் கஞ்சா சாக்லேட்டுகளை சப்ளை செய்யும் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- 150 கிராம் எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்டேல் குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் எடை உள்ள 10 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்