search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbage tax collection"

    • காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது.
    • வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தான் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகராட்சியின் கட்டாய குப்பை வரி வசூலை, புதுச்சேரி முதல் அமைச்சரின் வாய்மொழி உத்தரவை ஏற்று, உடனே ரத்து செய்யவேண்டும். என, காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட பா.ஜ.க தலைவர் துரைசேனாதிபதி, பா.ஜ.க நிர்வாகிகளுடன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து ஓர் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர், மனு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-காரைக்கால் மாவட்ட நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தான் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என நகராட்சி ஊழியர்கள் அடம்பிடிப்பது கண்டனத்திற்குரியது. குப்பை வரி வசூல் குறித்து, புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி, வாய்மொழியாக கூறிய குப்பை வரி ரத்து என்ற ஆணையை, காரைக்கால் நகராட்சி தொடர்ந்து ஏற்க மருத்து வருகிறது. மேலும், எங்களுக்கு அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. என்று, பொதுமக்களிடம் நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் விவாதம் செய்துவரும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, மேற்கண்ட பிரச்சனையில் கலெக்டர் உடனே தலையிட்டு, மாநில அரசிடமிருந்து முறையான ஆணை வரும் வரை, குப்பை வரியை தவிர்த்து, எனைய வரிகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து, கலெக்டருக்கும், புதுச்சேரி அரசுக்கும் முறைப்படி மனு அனுப்பியுள்ளோம். என்றார்

    ×