என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garment manufacturing company"
- தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் நடந்தது.
- பல்வேறு காரணங்களால் பணியாளர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் உருவாகிவிடுகின்றன.
திருப்பூர் :
தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்.கே., ரெசிடென்ஸியில் நடந்தது.இதில், என்.ஐ.பி.எம்., திருப்பூர் கிளை தலைவர் மோகன் பேசியதாவது:-
ஆடை உற்பத்தி நிறுவனங்களில், அமைதியான பணிச்சூழல் நிலவுவது மிகவும் அவசியம். பல்வேறு காரணங்களால் பணியாளர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் உருவாகிவிடுகின்றன.இதனால் வீண் குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாகின்றன. ஆடை உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. உரிமையாளர்களுக்கும் கடை நிலை தொழிலாளர்களுக்கும் இடையே பொது மேலாளர், உதவி மேலாளர், மனிதவளம், உற்பத்தி மேலாளர், உற்பத்தி மேற்பார்வையாளர், நிறுவன உரிமையாளர் என பல்வேறுவகை இரண்டாம் கட்ட பணியாளர் உள்ளனர். நிறுவனங்களை திறம்பட நடத்திச்செல்வதில் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.மனிதர் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணம் கொண்டவராக உள்ளனர். குணத்தில் அடிப்படையில், மனிதர்களை 10 வண்ணங்களால் வகைப்படுத்தமுடியும்.ஒரு நிறுவனம், தங்கள் பணியாளர்களின் குணம், திறன் சார்ந்த பலம், பலவீனங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
அதனடிப்படையில் எந்த இடத்தில் யாரை அமர்த்தவேண்டும் என ஆராய்ந்து பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும்.தவறான இடத்தில் பணி அமர்த்தினால் எத்தகைய திறன் மிக்கவர்களானாலும், அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், நிறுவன பணிச் சூழலும், உற்பத்தியும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- 6 மாதமாகியும் கட்டண தொகை வழங்க மறுப்பதாக, ஆடை உற்பத்தி நிறுவனம் மீது சாய ஆலை கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.
- ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர்:
திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனம் அருள்புரத்தில் உள்ள சாய ஆலைக்கு பின்னல் துணிக்கு சாயமேற்றுவதற்கான ஆர்டர் வழங்கியுள்ளது.அதனடிப்படையில் துணிக்கு சாயமேற்றி வழங்கியுள்ளது சாய ஆலை. துணியை பெற்றுக்கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனம் சாய ஆலைக்கு உரிய கட்டண தொகையை வழங்காமல் இழுத்தடித்துவருகிறது.
இதையடுத்து கட்டண தொகை 3.50 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறு ஆடை உற்பத்தி நிறுவனம் மீது ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது சாய ஆலை.இது குறித்து ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:-
6 மாதமாகியும் கட்டண தொகை வழங்க மறுப்பதாக, ஆடை உற்பத்தி நிறுவனம் மீது சாய ஆலை கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. சாயமேற்றிய துணியில் ஆடை தயாரித்து ஷோரூமுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் ஆடையிலிருந்து சாயம் பிரிந்து வெண்மையாக மாறுகிறது.தரமற்ற முறையில் சாயமேற்றியதாலேயே கட்டண தொகை வழங்கவில்லை என ஆடை உற்பத்தியாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.இருதரப்பினரிடமும் உரிய ஆவணங்களை கேட்டுள்ளோம். மேலும் சாயமேற்றிய துணி மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்