search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garuda Vehicle Service"

    • ஏழுமலையன் கோவிலில் நேற்று 75,356 பேர் தரிசனம் செய்தனர்.
    • புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் குழந்தை பிறக்கும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 நாட்கள் கருடசேவை நடக்கிறது. வருகிற 9-ந் தேதி கருட பஞ்சமி மற்றும் 19-ந் தேதி ஆவணி மாத பவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் எழுந்தருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    9-ந் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடன் மீது திருமாட வீதிகளில் ஏழுமலையான் வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

    இதில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு கருடனை போல் வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

    19-ந் தேதி ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    ஒரே மாதத்தில் 2 கருட வாகன சேவை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையன் கோவிலில் நேற்று 75,356 பேர் தரிசனம் செய்தனர். 21,815 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×