search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas pipeline supply"

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 44 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக பைப்பில் கியாஸ் சப்ளை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #CookingGas #GasPipeline
    சென்னை:

    தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் நேரடியாக கியாஸ் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    மத்திய நகர கியாஸ் வினியோக திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் நகரங்கள் முழுவதிலும் பைப் லைன் மூலம் கியாஸ் சப்ளை செய்யும் வசதியை செயல்படுத்துவதாகும்.

    இந்த திட்டம் டெல்லி, மும்பை நகரங்களில் உள்ளது. தற்போது சென்னையிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை குழு ஆலோசனை நடத்தி வந்தது.

    9-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவில் சென்னையில் பைப் லைன் மூலம் கியாஸ் சப்ளை செய்ய சாத்திய கூறு கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதற்காக கியாஸ் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

    சென்னையில் தனியார் நிறுவனங்களான தோரண்ட்டு கியாஸ் நிறுவனம் மற்றும் ஏ.ஜி.பி. எல்.என்.ஜி. மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 44 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக பைப்பில் கியாஸ் சப்ளை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.


    இந்த 3 மாவட்டங்களில் 333 கியாஸ் நிரப்பும் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பி கொள்ளலாம். இதில் ஒரு கிலோ கியாஸ் 40 ரூபாய்க்கு கிடைக்கும்.

    மேலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு பைப் லைன் கியாஸ் திட்டத்தை செயல்படுத்த அதானி கியாஸ் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன.

    சராசரியாக ஒரு கிலோ கியாசுக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் 16¼ லட்சம் வீடுகளுக்கு பைப் லைன் கியாசும், 557 கியாஸ் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது டெல்லி நகரின் வீட்டில் பைப் லைன் இணைப்பு கொடுக்க ரூ. 5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின் மாதந்தோறும் கியாஸ் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பைப் லைனில் மீட்டர்கள் பொருத்தப்படும்” என்றார்.

    இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நேரடி கியாஸ் வினியோக திட்டத்தை 2020-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #CookingGas #GasPipeline
    ×