search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gautam Gambhi"

    • கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம்.
    • ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே மைதானத்தில் தகராறு ஏற்பட்டது. மூவரும் மைதானத்தில் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது, கம்பீரும், கோலியும் கட்டிப்பிடித்து தகராறுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே...

    இந்நிலையில், இந்த தகராறு முடித்து வைத்தது கவுதம் கம்பீர் தான் என்று மூத்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

    மேலும் அமித் மிஸ்ரா கூறுகையில், "கவுதமிடம் நான் ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்தேன். விராட் கோலி அவரை நோக்கிச் செல்லவில்லை. கவுதம் தாம் விராட் கோலியை நோக்கி சென்றார். அவர் சென்று 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் குடும்பம் எப்படி இருக்கிறது' என்று கேட்டார். எனவே கவுதம்தான் சண்டையை முடித்தார், கோலி சண்டையை முடிக்கவில்லை.

    அந்த நேரத்தில் கவுதம் தனது பெரிய மனதைக் காட்டினார். கோலிதான் சென்று சண்டையை முடித்திருக்க வேண்டும். அவர் சென்று 'கௌதி பாய், இதை முடித்துக் கொள்வோம்' என்று கூறியிருக்க வேண்டும்.

    கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம். ஆனால், ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

    நான் பல வருடங்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இன்னும் ஐபிஎல் அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் ரோகித்தை சந்திக்கும் போது, அவர் எப்போதும் என்னை கேலி செய்வார். அவர் என்ன நினைப்பார் என்று நான் யோசிக்க தேவையில்லை.

    விராட் நிறைய மாறிவிட்டதை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பேசுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டோம். உங்களுக்குப் புகழும் அதிகாரமும் கிடைத்தால், மற்றவர்கள் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தங்களை அணுகுகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று மிஸ்ரா கூறினார்.

    ×