என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Geetha Jeevan MLA"
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகரத்தில் மத்திய அரசின் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட ஊரணி ஒத்த வீடு, மினி சகாயபுரம் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் மாநகராட்சி மூலம் குடிநீர் வசதியோ, தெருவிளக்கோ, சாலை வசதியோ கழிப்பிட வசதியோ செய்ய முடியாத நிலையில் அந்த ஏழை-எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதுபற்றி மத்திய உப்பு இலாகா அதிகாரியை நேரில் சந்தித்து மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்த போது, மாநில அரசுக்கு இடத்தை விலைக்கு வழங்க முடியும் என்பதை கூறினார். ஆகவே கலெக்டர் சிறப்புக் கவனம் செலுத்தி அரசின் மூலம் அந்த இடத்தைப் பெற்று, அதில் குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வீரநாயக்கன்தட்டு மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க முத்தையா புரத்துக்கு 5கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்தப் பகுதியில் 150 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் அந்தப் பகுதியில் நகரும் கூட்டுறவு கடை மூலமோ அல்லது வாரம் 2 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் அந்தப் பகுதிக்கு சென்று விநியோகம் செய்யவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தூத்துக்குடி மாநகரத்தில் மணிநகர், அண்ணாநகர்-1, டூவிபுரம் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடை போல்பேட்டை பகுதி மார்க்கெட்டிங் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் அதிக தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே போல்பேட்டை மார்க்கெட்டிங் சொசைட்டியில் உள்ள கடையை டூவிபுரத்தில் உள்ள மகளிர்க்குழு வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளில் மாற்றி அமைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் 4-ம் ஆண்டு மணிராஜ் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ- மாணவிகள் பங்குபெறும் மின்னொளி கைப்பந்து போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முதல் நாள் போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, உஷா அங்கோ, பால கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இதையடுத்து 25-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சமத்துவ மக்கள் கழக மாநிலத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாம் இந்தியர் கட்சி நிறுவனத்தலைவர் ராஜா, முத்தையா குருமூர்த்தி, மாஸ்டர் மெர்வின் மணிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்குகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மணிராஜ் நினைவு வாலிபால் கிளப் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர். #geethaJeevan
தூத்துக்குடி:
தூத்துக்குடி தி.மு.க. மாநகர பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், பொருளாளர் சுசீந்திரன், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் பூங்கோதை எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.
இதில் கருணாநிதி 95-வது பிறந்தநாளை முன்னிட்டு 22-ந் தேதி கீதா மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் மருத்துவ முகாமில் பல்வேறு வகையான சிறப்பு நிபுணர்கள் உள்ள டாக்டர்கள் வர இருக்கிறார்கள். இதில் தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ்.ரமேஷ், பொரு ளாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொழிலதிபர் பொன்சிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் அணி அணியாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவனும் போராட்டத்தில் இறங்கினார். இதற்காக தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் இருந்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
தூத்துக்குடி 4-ம் கேட் குறிஞ்சிநகர் பகுதியில் வரும் போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்