search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "George HW Bush"

    அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் டெக்சாஸ் நகரில் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #RIPBush #Bushlaidtorest
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

    நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.

    பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர்.  புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.

    அந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.


    இங்குள்ள வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினியா டிரம்ப், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    மேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் அரசின் சார்பில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

    பின்னர், வாஷிங்டனில் இருந்து நேற்று டெக்சாஸ் மாநிலத்துக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

    டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் லேசாக பெய்த மழைக்கிடையில் அவரது  மனைவி பார்பரா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் புஷ் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #RIPBush #Bushlaidtorest 
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்த முன்னாள் அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ்(94) உடலை வாஷிங்டன் நகருக்கு கொண்டு வர அதிபரின் சிறப்பு விமானத்தை டிரம்ப் அனுப்பியுள்ளார். #GeorgeHWBush #SpecialAirMission41
    வாஷிங்டன்:

    பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

    இவரது மகனான  ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

    நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார்.

    பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ’41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மனைவியுடன் புஷ்

    அந்த விமானத்தில் புஷ் உடல் இன்னும் சில மணி நேரங்களில் வாஷிங்டன் நகரை வந்தடையும். உலக தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று மாலை முதல் புதன்கிழமை காலை வரை அவரது உடல் கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

    அங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பின்னர், மீண்டும் இதே விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது  மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

    இதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  #GeorgeHWBush #SpecialAirMission41
    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். #GeorgeHWBush #PMModi
    புதுடெல்லி:

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுடன் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ஜார்ஜ் புஷ் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தில் முக்கியமான காலக்கட்டத்தில் அவர் சிறந்த தலைவராக செயல்பட்டார்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். #GeorgeHWBush #PMModi
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #GeorgeHWBush
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு புஷ் மைனே மாநிலத்தில் வசித்து வருகிறார். 93 வயதான ஜார்ஜ் புஷ்சுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மிகவும் சோர்வடைந்தார். இதையடுத்து கடந்த மாத இறுதியில் தெற்கு மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உறவினர்கள் உடன் இருந்து அவரை கவனித்து வந்தனர். ஜார்ஜ் புஷ் குணமடைய வேண்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.



    சுமார் ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் குணமடையவேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்திருப்பதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இதேபோல் கடந்த ஏப்ரல் மாதமும் ஜார்ஜ் புஷ்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து இரண்டு வார காலம் டெக்சாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.  #GeorgeHWBush
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #GeorgeHWBush
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

    அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்றும் புஷ்ஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். #GeorgeHWBush
    ×