என் மலர்
நீங்கள் தேடியது "Ghulam Fatima"
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 18-ந்தேதி ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ளது.
- உத்தேச அணி பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான பிஸ்மா மரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் சென்ற கார் விபத்தில் சிக்கி இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அணி மருத்துவக்குழு அவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வருகிற 18-ந்தேதி முதல் பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான பயிற்சி முகாமில் இருவரும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தான் பெண்கள் அணி டி20 தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை கைப்பற்றியதுடன் 2018-ல் வங்காளதேசத்தை வீழ்த்திய பிறகு வெளிநாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.