search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl Student Molested"

    • திருமணத்துக்கு மறுத்ததோடு கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி மிரட்டி வருகிறார்.
    • காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி புகார் மனு அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தாய் சென்னையில் வேலை செய்து வருகிறார். நான் எனது தந்தையுடன் திருப்பூரில் தங்கி இருந்து படித்து வந்தேன்.

    கல்லூரியில் என்னுடன் படிக்கும் வெற்றிவேல் (வயது 17) என்பவர் என்னுடன் நண்பராக பழகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனை அறிந்து கொண்ட வெற்றிவேல் எனது வீட்டிற்கு வந்து நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம் என கூறினார்.

    அப்போது வெற்றிவேல் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதே போல் மீண்டும் ஒருமுறை உல்லாசத்திற்கு அழைத்த போது நான் மறுத்தேன். உடனே அவர், ஏற்கனவே உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

    இதனால் நான் கர்ப்பமானேன். இது குறித்து வெற்றிவேலிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்ததோடு இந்த கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்.

    எனவே என்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    ×