search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gita Gopinath"

    சர்வதேச நிதியத்தின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். #GitaGopintah #ChiefEconomist
    வாஷிங்டன்:

    189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.

    இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.

    கடந்த 1-ந்தேதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

    தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் கீதா கோபிநாத் கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் டி.வி.கோபிநாத்-விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  #GitaGopintah #ChiefEconomist 
    ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் எனும் இந்தியரை நியமித்து அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #IMF #GitaGopinath
    புதுடெல்லி :

    பன்னாட்டு நிதியம் என அழைக்கப்படும் ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார்.

    தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார்.

    முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார். பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

    மேலும், பொருளாதார பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியராகவும் உள்ள இவர், 40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

    கீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் கீதா முடித்தார்.

    அதன்பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகச் சேர்ந்த கீதா கோபிநாத், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு மாறினார். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. #IMF #GitaGopinath
    ×