என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gnayiru Thalam"
- ஆனந்த ரூபினியாம் சொர்ணாம்பிகே
- இன்பங்களைத் தருபவளாம் சொர்ணாம்பிகே
1. அகிலமெல்லாம் காப்பவளாம் சொர்ணாம்பிகே
அகிலலோக நாயகியாம் சொர்ணாம்பிகே
சரணம் என்று வந்தவரை சொர்ணாம்பிகே
சந்ததமும் வாழ்த்துகின்ற சொர்ணாம்பிகே
2. ஆனந்த ரூபினியாம் சொர்ணாம்பிகே
ஆபத்தில் காப்பவளாம் சொர்ணாம்பிகே
ஆறுமுகன் தாயனவளாம் சொர்ணாம்பிகே
ஆறுதலைத் தந்திடுவாள் சொர்ணாம்பிகே
3. இமவானின் செல்வியான சொர்ணாம்பிகே
இன்பங்களைத் தருபவளாம் சொர்ணாம்பிகே
இடர் களையும் நாயகியாம் சொர்ணாம்பிகே
இஷ்டசித்தி அளிப்பவளாம் சொர்ணாம்பிகே
4. ஈஸ்வரனின் நாயகியே சொர்ணாம்பிகே
ஈஸ்வரியே எங்கள் தாயே சொர்ணாம்பிகே
ஈடில்லாத் தெய்வமம்மா சொர்ணாம்பிகே
ஈகை குணம் கொண்டவளாம் சொர்ணாம்பிகே
5. உலகளந்தோன் சோதாரியே சொர்ணாம்பிகே
உண்மை பரம்பொருளே சொர்ணாம்பிகே
உலகாளும் நாயகியே சொர்ணாம்பிகே
உன் பாதம் சரணடைந்தேன் சொர்ணாம்பிகே
6. ஐங்கரனி தாயான சொர்ணாம்பிகே
ஐயமெல்லாம் தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே
ஐயப்பன் தாயான சொர்ணாம்பிகே
ஐஸ்வரிய தேவதையாம் சொர்ணாம்பிகே
7. எங்கும் நிறைந்தவளாம் சொர்ணாம்பிகே
எவ்வுலகும் காப்பவளாம் சொர்ணாம்பிகே
எங்கள் குறை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே
எங்கள் குல தெய்வமம்மா சொர்ணாம்பிகே
8. ஏழைகளைக் காப்பவளாம் சொர்ணாம்பிகே
ஏகரோக நாயகியே சொர்ணாம்பிகே
ஏகாந்த ரூபிணியாம் சொர்ணாம்பிகே
ஏழிசை வாலியான சொர்ணாம்பிகே
9. கற்பூர நாயகியே சொர்ணாம்பிகே
கானக வாசனியாம் சொர்ணாம்பிகே
கனகநவ மணிகள் பூண்ட சொர்ணாம்பிகே
கண்கண்ட தெய்வமம்மா சொர்ணாம்பிகே
10. தஞ்சமென்ற பேர்களையே சொர்ணாம்பிகே
தயவுடனே காப்பவளாம் சொர்ணாம்பிகே
தவயோக நாயகியாம் சொர்ணாம்பிகே
தவசிகளை காப்பவளாம் சொர்ணாம்பிகே
11. ஜெகம் புகழும் நாயகியாம் சொர்ணாம்பிகே
ஜென்மவினை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே
சதுர் மறைவின் நாயகியே சொர்ணாம்பிகே
சத்ய சொரூபினியாம் சொர்ணாம்பிகே
12. பரமனது பாகம் அமர்ந்த சொர்ணாம்பிகே
பக்தர்களை காப்பவளாம் சொர்ணாம்பிகே
பரம் பொருளின் தத்துவமே சொர்ணாம்பிகே
பலவினைகள் போக்கிடுவார் சொர்ணாம்பிகே
13. மண்ணுலக நாயகியாம் சொர்ணாம்பிகே
மக்கள் குறை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே
மாதவனின் சோதரியாம் சொர்ணாம்பிகே
மாதுஜனஷகியாம் சொர்ணாம்பிகே
14. மனக்குறை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே
மனநிறைவைத் தந்திடுவாள் சொர்ணாம்பிகே
மனம் மகிழ்ந்து எல்லோர்க்கும் சொர்ணாம்பிகே
மங்களங்கள் தந்திடுவாள் சொர்ணாம்பிகே
15. மலைமகளாம் எங்கள் அன்னை சொர்ணாம்பிகே
மனக்கவலை போக்கிடுவாள் சொர்ணாம்பிகே
இகபர நாயகியாம் சொர்ணாம்பிகே
இன்னல்களைப் போக்கிடுவாள் சொர்ணாம்பிகே
16. தஞ்சமென்ற பேர்களையே சொர்ணாம்பிகே
தயவுடனே காப்பவளாம் சொர்ணாம்பிகே
தவயோக நாயகியாம் சொர்ணாம்பிகே
தவசிகளைக் காப்பவளாம் சொர்ணாம்பிகே
17. தருமத்தின் நாயகியாம் சொர்ணாம்பிகே
தத்துவப் பரம்பொருளே சொர்ணாம்பிகே
சத்திய சொரூபினியே சொர்ணாம்பிகே
சமயம் அறிந்து காப்பவளாம் சொர்ணாம்பிகே
18. ஞாயிறு என்னும் பதியில் வாழும் சொர்ணாம்பிகே
நம்பினோரைக் காப்பவளாம் சொர்ணாம்பிகே
சங்கரனின் நாயகியாம் சொர்ணாம்பிகே
சங்கடங்கள் தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே
19. கருணை உள்ளம் கொண்டவளாம் சொர்ணாம்பிகே
கற்பகமே மெய்ப் பொருளே சொர்ணாம்பிகே
20. ஸ்ரீராஜராஜேஸ்வரி லலிதாம்பா சொர்ணாம்பிகே
ராஜயோகம் தந்திடுவாள் சொர்ணாம்பிகே
நித்யகல்யாணி நிமலே சொர்ணாம்பிகே
நித்தியானந்த ரூபினியே சொர்ணாம்பிகே
- சங்கிலியார் அவதரித்த ஞாயிறு நாடு இன்றும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.
- ஓம் ஆதித்யாய நமஹ
சூரிய நமஸ்கார மந்திரம்
ஓம் மித்ராய நமஹ
ஓம் ரவயே நமஹ
ஓம்சூர்யாய நமஹ
ஓம் ககாய நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் ஹிரண்யகர்பாய நமஹ
ஓம் மரீசயே நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் சவித்ரே நமஹ
ஓம் அர்காய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
ஓம் ஸ்ரீ சத்விகு சூரியநாராயண நமஹ
சங்கிலியார் அவதரித்த ஞாயிறு நாடு இன்றும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.
இது நாம் பெற்ற பெரும் பேறு ஆகும்.
இன்றும் திருவொற்றியூரில் பிரமோற்சவ ஒன்பதாம் நாள் மகிழடி சேவை உற்சவத்தன்று திருக்கல்யாண மகோற்சவம் சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் நடைபெறுகிறது.
இப்போதும் சங்கிலியார் மரபினர் இவ்விழாவில் சங்கிலியாருக்கும் சுந்தரருக்கும் தாலி, கூரைப்புடவை, வஸ்திரம் சீர்வரிசை வழங்கி அன்னதானமும் அளித்து அந்த பெருமை காத்து வருகிறார்கள்.
ஞாயிறு நாட்டு மக்களும், வேளாள மரபினர்களும் ஸ்ரீசங்கிலிநாச்சியார் அடையப்பெற்றிருக்கும் பேரும் புகழும் தெய்வீகத்தன்மையும் வியக்கத்தக்கனவாகும்.
- பஞ்ச பாஸ்கர தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள தலங்களாகும்.
- அதில் ஒன்று ஞாயிறு தலம். சூரிய பகவான் பூசித்ததால் இத்திருநாமம் பூண்டது.
பஞ்ச பாஸ்கர தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள தலங்களாகும்.
அதில் ஒன்று ஞாயிறு தலம். சூரிய பகவான் பூசித்ததால் இத்திருநாமம் பூண்டது.
வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்று குறிப்பிடுவார்கள்.
இதனால் இந்த தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. மற்ற 4 பாஸ்கர தலங்கள் விபரம் வருமாறு:
1. ஞாயிறு & சென்னைக்கு அருகில்
2. திருச்சிறுகுடி & நன்னிலம் அருகில்
3. திருமங்களகுடி & ஆடுதுறை அருகில்
4. திருப்பரிதி நியமம் & நீடாமங்கலம் அருகில்
5. தலைஞாயிறு & திருவாரூர் அருகில்
- துறவிகள், சாமியார்கள், சன்னியாசிகளின் கைகளில் ‘திருவோடு’ பார்த்து இருப்பீர்கள்.
- ஞாயிறு கோவிலில் திருவோடு மரம் வளர்க்கிறார்கள்.
துறவிகள், சாமியார்கள், சன்னியாசிகளின் கைகளில் 'திருவோடு' பார்த்து இருப்பீர்கள்.
இந்த திருவோடுகள் ஒரு மரத்தில் இருந்து கிடைக்கிறது.
சிறு காயாக வந்து, தேங்காயை விட பெரிய காயாகி பிறகு திருவோடு போன்று அந்த காய் மாறி விடுகிறது. இதனால் இந்த மரத்துக்கு திருவோடு மரம் என்று பெயர்.
திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமா காளியம்மன் ஆலயத்தில் திருவோடு மரம் தல விருட்சமாக உள்ளது.
வேறு எங்கும் இந்த மரத்தை வளர்க்க மாட்டார்கள்.
ஆனால் ஞாயிறு கோவிலில் திருவோடு மரம் வளர்க்கிறார்கள்.
ஆலய ராஜகோபுரம் அருகே சங்கிலி நாச்சியார் சன்னதிக்கு பக்கத்தில் இந்த மரம் உள்ளது.
தற்போது அந்த திருவோடு மரத்தில் 10க்கும் மேற்பட்ட காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.
பச்சை நிறத்தில் காணப்படும் அந்த திருவோடு காய்கள் விளைந்து முற்றியதும் தெரிந்துவிடும்.
சில சமயம் விளைச்சல் முற்றி திருவோடு காய்கள் கீழே விழுந்து விடுவதுண்டு.
அதை எடுத்து சரி பாதியாக வெட்டினால் 2 திருவோடுகள் கிடைத்து விடும்.
பச்சையாக இருக்கும் திருவோடு காய்ந்ததும் நன்கு கெட்டியாகிவிடும்.
அதைத்தான் யாசகம் பெற சன்னியாசிகள் பயன்படுத்துகிறார்கள்.
ஞாயிறு திருத்தலத்தில் விளையும் இந்த திருவோடுகளை இலவசமாக சன்னியாசிகளுக்கு கொடுத்து விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
- அதில் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பக்தர்கள் பார்க்க முடியும்.
- ஞாயிறு தலத்துக்கு வழிபட செல்லும்போது நினைவில் வைத்துக் கொண்டு இதை தவறாமல் பார்த்து வாருங்கள்.
சோழ மன்னன் வடக்கு நோக்கி படையெடுத்து வந்தபோது இந்த தலத்தில் உள்ள குளத்தில் வித்தியாசமாக இருந்த தாமரை மலரை பறிக்க முயன்றான்.
அந்த தாமரை விலகி செல்லவே அதன் மீது தனது வாளை வீசினான்.
அந்த வாள் மலர் மீது பட்டு வெட்டியது. ரத்தம் பீறிட்டது. இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்
கருவறையில் உள்ள லிங்கத்தின் தலையிலும் வெட்டுக்காயம் உள்ளது.
ஆனால் மலர் அலங்காரங்களால் புஷ்பரதேஸ்வரர் லிங்கம் மறைக்கப்பட்டு விடுவதால்
அதன் மீதுள்ள வெட்டு காயத்தை பக்தர்களால் காண இயலாது.
என்றாலும் நந்தி அருகே உள்ள மண்டபத்தின் தூணில் புஷ்பரதேஸ்வரர் லிங்கம் இடம் பெற்றுள்ளது.
அதில் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பக்தர்கள் பார்க்க முடியும்.
ஞாயிறு தலத்துக்கு வழிபட செல்லும்போது நினைவில் வைத்துக் கொண்டு இதை தவறாமல் பார்த்து வாருங்கள்.
- இத்தலத்தில் அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை.
- கருவறைக்குள் அம்பிகையின் சிலைக்கு முன்பாக இந்த சக்கரம் நிறுவப்பட்டுள்ளது.
இத்தலத்தில் அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை.
இவருக்கு கருணாம்பிகை என்ற பெயரும் உண்டு.
இவர் சிவபெருமான் வலது பக்கம் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.
இத்தலம் உருவான போது அம்பிகை மிகவும் உக்கிரத்துடன் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக அம்பிகையின் உக்கிரத்தை தணிக்கும் சக்கரங்களை ஆதிசங்கரர் நிறுவி இருப்பதை பல்வேறு தலங்களில் காணலாம்.
அதேபோன்று ஒரு சக்கரத்தை இத்தலத்திலும் ஆதிசங்கரர் நிறுவி உள்ளார்.
கருவறைக்குள் அம்பிகையின் சிலைக்கு முன்பாக இந்த சக்கரம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சொர்ணாம்பிகை அமைதியும், சாந்தமும் தவழ காணப்படுகிறாள்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தேவையானதை வாரி வழங்கும் சிறப்பையும் இந்த அம்பிக்கை பெற்றுள்ளாள்.
வழக்கமாக சிவாலயங்களில் தனி சன்னதியில் இருக்கும் அம்பாள் முன்பு பலி பீடம், கொடி மரம் ஆகியவை நிறுவப்பட்டு இருக்கும்.
ஆனால் ஞாயிறு தலத்தில் பலி பீடமோ, கொடி கம்பமோ இல்லை. அதற்கும் தனியாக ஒரு ஐதீகம் இருப்பதாக கூறப்படுகிறது.
- சிவ ஆலயங்களுக்கு நீங்கள் வழிபடசென்றால் இறுதியில் நவக்கிரக சன்னதி இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
- இங்கு சூரிய பகவான் வீற்றிருந்து அருள் பாலிப்பதால் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லை.
சிவ ஆலயங்களுக்கு நீங்கள் வழிபடசென்றால் இறுதியில் நவக்கிரக சன்னதி இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
எல்லா பழமையான ஆலயங்களிலும் நிச்சயம் நவக்கிரக சன்னதி இருக்கும். ஆனால் ஞாயிறு தலத்தில் நவக்கிரக சன்னதி இல்லை.
இங்கு சூரிய பகவான் வீற்றிருந்து அருள் பாலிப்பதால் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லை.
நவக்கிரகங்களுக்கு உரிய அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் இந்த சூரிய பகவானுக்கே செய்து விடுகிறார்கள்.
கிரகங்களின் தலைவராக சூரியன் இருப்பதால் அனைத்து கிரகங்களுக்கான பலன்களையும் இவரே தந்து அருளுவதாக ஐதீகம்.
- சிவாலய கருவறை கோஷ்டத்தில் ஞான குருவான தெட்சிணாமூர்த்தி வீற்றிருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
- சில தலங்களில் இரு கால்களையும் சேர்த்தப்படி தெட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.
சிவாலய கருவறை கோஷ்டத்தில் ஞான குருவான தெட்சிணாமூர்த்தி வீற்றிருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
பொதுவாக தெட்சிணாமூர்த்தி சிற்பம் கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்திருப்பார்.
சிவனின் 64 வடிவங்களில் ஒருவரான இவர் சனந்தர், கனகர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய 4 பேருக்கும் வேதங்களை போதிப்பார்.
இவர் ஒரு காலை தொங்கவிட்டபடி காணப்படுவார்.
சில தலங்களில் இரு கால்களையும் சேர்த்தப்படி தெட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.
ஆனால் ஞாயிறு தலத்தில் தெட்சிணாமூர்த்தி ஒரு காலை சற்று கீழே இறக்கி விட்டபடி காணப்படுகிறார்.
இது வித்தியாசமான அமைப்பாக கருதப்படுகிறது.
- ஒரு ஆலயத்தில் தெற்கு பகுதியில் ராஜகோபுரம் இருந்தால், அந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகத் திகழும்.
- சூரிய கிரகணம் தொடர்பான அனைத்து தோஷங்களுக்கும் இங்கு முழுமையான பரிகாரம் கிடைக்கும்.
பொதுவாக ஒரு ஆலயத்தில் தெற்கு பகுதியில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு இருந்தால், அந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகத் திகழும்.
ஆலயங்கள் உருவான காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது.
ஞாயிறு தலத்திலும் தென் திசையில் ராஜகோபுரம் அமைந்துள்ளதால், இதுவும் பரிகாரத்தலம் என்று பெயர் பெற்றுள்ளது.
சூரிய கிரகணம் தொடர்பான அனைத்து தோஷங்களுக்கும் இந்த ஆலயத்தில் முழுமையான பரிகாரம் கிடைக்கும்.
- ஞாயிறு திருத்தலத்துக்கு செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ் வசதி உள்ளது.
- செங்குன்றத்தில் இருந்து நிறைய டவுண் பஸ் சேவைகள் உள்ளன.
ஞாயிறு திருத்தலத்துக்கு செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ் வசதி உள்ளது.
காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் அந்த பஸ் சேவை இயக்கப்படுகிறது.
செங்குன்றத்தில் இருந்து நிறைய டவுண் பஸ் சேவைகள் உள்ளன.
'ஞாயிறு' என்று போர்டுடன் பஸ் சேவை உள்ளது.
ஆனால் செங்குன்றம் ஞாயிறு இடையே சுமார் 1 மணி நேரத்துக்கு ஒரு தடவையே டவுண் பஸ் சேவை இயக்கப்படுகிறது.
காரில் சென்றால் மிக விரைவில், குறித்த நேரத்துக்குள் இந்த தலத்துக்கு சென்று வர முடியும்.
காரில் செல்பவர்கள் செங்குன்றம் வழியாக செல்வதே நல்லது.
செங்குன்றத்தில் இருந்து சோத்துப்பாக்கம் சாலை வழியாக செல்ல வேண்டும்.
வழியில் அருமந்தை எனும் ஊர் வரும்.
அதை தாண்டினால் ஞாயிறு கிராமம் வந்து விடும்.
சாலை ஓரத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது.
எனவே தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
மிக எளிதாக சென்றடையலாம்.
ஆனால் ஆலயம் அமைந்துள்ள பகுதி மிகவும் குக்கிராமம் என்பதால் அதற்குரிய ஏற்பாடுகளுடன் செல்வது நல்லது.
பூஜைக்குரிய பொருட்கள் மற்றும் பூக்களை புறப்படும் போது வாங்கிக்கொள்ளவும்.
அதுபோல சாப்பாடு விஷயத்திலும் கவனம் தேவை.
அந்த ஊரில் எந்த ஓட்டலும் கிடையாது.
எனவே எந்த சாப்பாடும் கிடைக்காது.
- இந்த கோவில் கருவறைக்கு நேர் எதிரில் சிவனை பார்த்தப்படி சூரிய பகவான் உள்ளார்.
- மன்னர்கள் கட்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்த தலத்தில் உள்ளன.
இந்த கோவில் கருவறைக்கு நேர் எதிரில் சிவனை பார்த்தப்படி சூரிய பகவான் உள்ளார்.
அந்த கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் பல்லவ விநாயகர், நடராஜர், கால பைரவர் அமைந்துள்ளனர்.
இந்த தலத்தில் ஒரே ஒரு பிரகாரம்தான் உள்ளது.
பிரகாரத்தில் உற்சவர் சன்னதி, கமல விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, காசி விஸ்வநாதர் சன்னதி, சங்கிலி நாச்சியார் சன்னதி உள்ளன.
சங்கிலி நாச்சியார் சன்னதி மட்டும் வடக்கு நோக்கி உள்ளது.
மற்ற அனைத்து சன்னதிகளும் மூலவர் சன்னதி போல கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அந்த பழமையின் சிறப்பை இந்த கோவிலில் உள்ள மண்டபத்தில் காணலாம்.
மண்டப தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் கண்கவரும் வகையில் அமைந்துள்ளன.
கோவில் வளாகம் முழுவதும் ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக செடி
கொடிகள் வளர்த்துள்ளனர்.
நட்சத்திரத்திற்கு ஏற்ப மரங்களும் வளர்த்துள்ளனர்.
இதனால் ஆலயம் குளர்ச்சியாக இருக்கிறது. ஈசனுக்கு எதிரே சிவனுக்கு மிகவும் பிடித்த நாகலிங்க மரம் உள்ளது.
கோவிலின் தென் புறத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதை 5 நிலை கோபுரமாக சீரமைத்துள்ளனர்.
பழமையும், புதுமையும் கலந்ததாக இந்த ஆலயம் திகழ்கிறது.
பொதுவாக பழமையான சிவாலயங்கள் மிக பெரிய அளவில் காணப்படும்.
ஆனால் இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயம் அல்ல.
அதற்காக மிக சிறிய ஆலயமாகவும் இதை கருத முடியாது.
மன்னர்கள் கட்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்த தலத்தில் உள்ளன.
நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு தலத்தை அமைத்துள்ளனர்.
அந்த வகையில் இந்த தலம் சூரிய பகவானுக்குரிய தலமாக திகழ்கிறது.
சூரியன் நீராடிய குளம் அந்த ஆலயத்தின் அருகில் உள்ளது.
அந்த தீர்த்தத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர்.
சூரியன் நீராடி ஈசனை வழிபட்டதால் அந்த குளத்திற்கு இந்த பெயர் வந்துள்ளது.
சூரியனை போலவே நாமும் அந்த ஈசனை வழிபட்டால் சூரியனுக்கு தோஷம் நீங்கியது போல நமக்கும் தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி.
- தொண்டை மண்டலத்தில் 32 சிவ தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.
- அதில் குறிப்பிடத்தக்கது ஞாயிறு திருத்தலம்.
தொண்டை மண்டலத்தில் 32 சிவ தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.
ஆனால் பாடல் பெறாவிட்டாலும் பக்தர்களின் மனதில் 100க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் இடம் பிடித்துள்ளன.
அதில் குறிப்பிடத்தக்கது ஞாயிறு திருத்தலம்.
சங்க காலத்தில் இத்தலம் தெய்வ தன்மையும், செல்வமும், வளமும், சான்றோர்களும் நிறைந்த ஊராக திகழ்ந்தது.
இவ்வூரை சுற்றி உள்ள வயல்கள் பச்சை பசேல் என்று காணப்பட்டதால் இயற்கை எழில் மிக்கதாக இருந்தது.
அதனால்தான் இந்த தலத்தை நாடு என்று சான்றோர்கள் போற்றி ஞாயிறு நாடு என்று அழைத்தனர்.
ஞாயிறு நாட்டில் பல புகழ்பெற்ற சிவாலயங்கள் இருந்தன. கால வெள்ளத்தில் பல சிவாலயங்கள் அழிந்து விட்டன.
மிஞ்சி இருப்பது ஞாயிறு தலம் மட்டும்தான். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த தலத்தின் சிறப்பை மக்கள் உணர்ந்து வர தொடங்கி உள்ளனர்.
இந்த தலம் சூரிய தலமாகும். இங்கு உள்ள சூரிய பகவானை வணங்கினால் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்பது ஐதீகம்.
இத்தலத்து ஈசன் பூவிலிருந்து தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்