search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஞாயிறு தலம் ஆலய அமைப்பு
    X

    ஞாயிறு தலம் ஆலய அமைப்பு

    • இந்த கோவில் கருவறைக்கு நேர் எதிரில் சிவனை பார்த்தப்படி சூரிய பகவான் உள்ளார்.
    • மன்னர்கள் கட்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்த தலத்தில் உள்ளன.

    இந்த கோவில் கருவறைக்கு நேர் எதிரில் சிவனை பார்த்தப்படி சூரிய பகவான் உள்ளார்.

    அந்த கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் பல்லவ விநாயகர், நடராஜர், கால பைரவர் அமைந்துள்ளனர்.

    இந்த தலத்தில் ஒரே ஒரு பிரகாரம்தான் உள்ளது.

    பிரகாரத்தில் உற்சவர் சன்னதி, கமல விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, காசி விஸ்வநாதர் சன்னதி, சங்கிலி நாச்சியார் சன்னதி உள்ளன.

    சங்கிலி நாச்சியார் சன்னதி மட்டும் வடக்கு நோக்கி உள்ளது.

    மற்ற அனைத்து சன்னதிகளும் மூலவர் சன்னதி போல கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இத்தலம் சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    அந்த பழமையின் சிறப்பை இந்த கோவிலில் உள்ள மண்டபத்தில் காணலாம்.

    மண்டப தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் கண்கவரும் வகையில் அமைந்துள்ளன.

    கோவில் வளாகம் முழுவதும் ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக செடி

    கொடிகள் வளர்த்துள்ளனர்.

    நட்சத்திரத்திற்கு ஏற்ப மரங்களும் வளர்த்துள்ளனர்.

    இதனால் ஆலயம் குளர்ச்சியாக இருக்கிறது. ஈசனுக்கு எதிரே சிவனுக்கு மிகவும் பிடித்த நாகலிங்க மரம் உள்ளது.

    கோவிலின் தென் புறத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதை 5 நிலை கோபுரமாக சீரமைத்துள்ளனர்.

    பழமையும், புதுமையும் கலந்ததாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    பொதுவாக பழமையான சிவாலயங்கள் மிக பெரிய அளவில் காணப்படும்.

    ஆனால் இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயம் அல்ல.

    அதற்காக மிக சிறிய ஆலயமாகவும் இதை கருத முடியாது.

    மன்னர்கள் கட்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்த தலத்தில் உள்ளன.

    நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு தலத்தை அமைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த தலம் சூரிய பகவானுக்குரிய தலமாக திகழ்கிறது.

    சூரியன் நீராடிய குளம் அந்த ஆலயத்தின் அருகில் உள்ளது.

    அந்த தீர்த்தத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர்.

    சூரியன் நீராடி ஈசனை வழிபட்டதால் அந்த குளத்திற்கு இந்த பெயர் வந்துள்ளது.

    சூரியனை போலவே நாமும் அந்த ஈசனை வழிபட்டால் சூரியனுக்கு தோஷம் நீங்கியது போல நமக்கும் தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி.

    Next Story
    ×