என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Goddess Lakshmi"
- அவதாரங்களில் அற்புதமானது, அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான்.
- பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.
நரசிம்மர் என்றாலே உக்கிர வடிவம், நினைத்ததும் பயம் கொள்ள வைக்கும் தோற்றம் தான் நினைவிற்கு வரும். ஆனால் நரசிம்ம ரூபங்களில் அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சி கொள்ள செய்யும் தோற்றமான லட்சுமி நரசிம்ம ரூபத்தில் மட்டும், லட்சுமி தேவி, நரசிம்மரின் அருகில் கூட இல்லாமல் மடியில் அமர்ந்த நிலையில் மட்டுமே காட்சி தருவார். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதமானது மட்டுமல்ல அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான் என சொல்வார்கள். மற்ற பெருமாள் ரூபங்களில் இல்லாத மற்றொரு தனிச்சிறப்பு நரசிம்மருக்கு உண்டு. நரசிம்ம ரூபம் உக்கிரமானது என்றாலும், பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.
நாளை என்ற சொல்லே அறியாத நரசிம்மர் என்பார்கள். தாயின் கருவில் உதித்து வந்தால் கூட தாமதமாகி விடும். தனது பக்தன் அதுவரை துன்பத்தை பொறுக்க வேண்டி இருக்குமே என நினைத்து, "தூணிலும் இருக்கிறாரா உனது ஸ்ரீஹரி?" என கேட்டு, அதை உடைக்க இரண்யன் தனது கதையை ஓங்கும் முன்பாக, அவன் வேண்டிய வரத்தின் படியே ஒரு அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிபட்டு வந்து, தனது பக்தன் பிரகலாதனை காத்தவர் நரசிம்ம மூர்த்தி.
அதே போல் தனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் தர வேண்டும் என கேட்ட பிரகலாதனுக்கு, உன்னை போன்ற ஒரு அற்புதமான தெய்வ பக்தி உள்ள குழந்தையை அளித்ததற்காக உனது தந்தைக்கு மட்டுமல்ல உனக்கு முந்தைய தலைமுறைக்கும், உனக்கு பின்னால் வரும் தலைமுறைக்கும் சொர்க்கத்தில் இடம் அளித்து விட்டேன் என கேட்டதை விட பல மடங்கு அதிகமான வரத்தை கொடுத்து அருளியவர் நரசிம்மர்.
பொதுவாக அனைத்து பெருமாள் ரூபங்களிலும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பிலேயே இடம்பிடித்திருப்பார். ஆனால் நரசிம்மர் கோலத்தில் மட்டும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பில் இடம் பெறாமல் மடியில் அமர்ந்திருப்பார். பெருமாள் அவளை ஆளிங்கனம் செய்த நிலையில், லேசான புன்னகையுடன், சாந்த சொரூபமாக காட்சி தருவார். இதனாலேயே நரசிம்ம ரூபங்களில், லட்சுமி நரசிம்மரை பலரும் விரும்பி வணங்குவர்.
நரசிம்மர், இரண்யனை வதம் செய்த பிறகு உக்ரம் அடங்காமல் இருந்தார். தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் நரசிம்ம ரூபத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினர். இறுதியாக சிவபெருமானிடம் போய் அனைவரும் முறையிட்டனர். அவர் சர்வேஸ்வர ரூபம் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார்.
ஆனால் அனைவரும் அஞ்சும் படியான ரூபத்தில் இருந்த நரசிம்மரின் மடியில் சென்று லட்சுமி தேவி அமர்ந்தாள். உடனடியாக நரசிம்மரின் உக்ர ரூபம் மாறி, அழகிய ரூபம் வந்தது. இத்தகைய அழகுடன் விளங்குவதால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.
நரசிம்மரின் மடியில் மட்டும் லட்சுமி அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பதற்கு காரணம் உண்டு. ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய திருமுகத்தை பார்த்து, ஆனந்தபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என மகாலட்சுமிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. திருமார்பில் இருந்தால் அவரின் முகத்தை பார்க்க முடியாது என்பதால் தான் மடியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் என்று சொல்கிறார்கள்.
- செட்டிநாட்டு பகுதிகளில் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
- எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.
லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.
செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.
கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.
முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.
சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.
காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.
கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.
மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.
`கோலம்' என்றால் 'அழகு' என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.
துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.
இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.
கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.
எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.
- அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
- அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.
இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.
தானியங்கள்:
வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.
சோழி:
அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.
மண்பானை:
அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
சங்கு:
அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஸ்ரீசக்கரம்:
அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
- நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது
இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். மாதம் மாதம் வாங்கும் சம்பளம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையை நினைத்து கவலை படாதே நாளே இருக்காது. தண்ணீரை வைத்து கடன் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குளியலறையில் வைக்கும் வாலி நீல நிறமாக இருக்க வேண்டும். அந்த வாலி அழுக்கு மற்றும் பாசி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்கோடு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டின் குளியலறையில் இருக்கும் பாத்திரம் நீலம் நிறமாக இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
கடன் பிரச்சனையை சரிசெய்வது எப்படி?
உங்களுக்கு கடன் தொல்லைகள் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன் நீல நிற வாலியில் தண்ணீர் பிடித்து வையுங்கள். பிடித்து வைத்த தண்ணீரை கொண்டு காலையில் குளிக்கும் இடத்தை சுத்தம் செய்யுங்கள். அந்த தண்ணீரில் சுத்தம் மட்டும் தான் செய்ய வேண்டும். குளிக்க கூடாது. குளியலறையில் பிடித்த தண்ணீரை மூடாமல் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
இதேபோல் நாம் அன்றாடம் சமைக்கும் பாத்திரங்கள் வேலைபளு காரணமாக கழுவாமல் அப்படியே வைத்து விடுவேம் இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் பண பிரச்சனை அதிகரிக்கும். இரவு எந்த வேலை எப்படி இருந்தாலும் இரவே உணவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்திடுங்கள், அழுக்கோடு வைத்து காலையில் எழுந்து கழுவினால் பண பிரச்சனையும், தெய்வ அருளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்காமல் போகும்.
ஆகவே நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது ஆகவே மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்