என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » government school playground
நீங்கள் தேடியது "government school playground"
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திடீரென ஆய்வு செய்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இதனை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திடீரென ஆய்வு செய்தார்.
இந்த மைதானத்தில், ஓசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கேற்றவாறு, மைதானத்தில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று அமைச்சர் ஆய்வு செய்து, நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்களுக்கு, சுத்தமான மற்றும் பாதுகாப்பான நடைபாதை, ஓய்வு இருக்கைகள், சுகாதார வளாக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர நகராட்சி ஆணையாளருக்கு, அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பி.ஆர்.வாசுதேவன், கட்சி பிரமுகர் முனிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

×

X