search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government vehicles"

    • நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது
    • அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

    • அறிவிப்பை மீறி பொருத்தியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
    • ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களில் அலங்கார விளக்குகள் பொருத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவின்படி அரசு வாகனங்களில் நியான் விளக்குகள், பிளாஷ் விளக்குகள், பல வண்ண எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட விளக்குகளை பொருத்துவது சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    அரசின் இந்த அறிவிப்பை மீறி பொருத்தியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

    • ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
    • அரசு வாகனங்களில் 'அ', 'ஜி' என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு துறையினருக்கும் அறிவுறுத்தி வருகிறோம்.

    சென்னை:

    போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகன பந்தயத்தில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் விதி மீறலுக்கு ஏற்ப, அபராதம் விதிக்கப்படுகிறது.

    நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏ.என். ஆர்.பி. வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

    இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ரூ.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விதிமீறும் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அரசு வாகன பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட் அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் புகார் தெரிவித்தனர்.

    இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு தற்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுமக்கள், அரசு பணியாளர்கள், அதிகாரிகள், தனியார் வாகனம், அரசு வாகனம் என்ற பாகுபாடின்றி, விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    'அ' 'ஜி' பயன்படுத்த கூடாது

    அரசு வாகனங்களில் 'அ', 'ஜி' என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு துறையினருக்கும் அறிவுறுத்தி வருகிறோம். சில அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனத்திலும் இதுபோல எழுதியுள்ளனர். அதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தி உள்ளோம்.

    விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது உறுதி. எந்த வகையான வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டாலும், அதுதொடர்பாக போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதள பக்கத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அதன் அடிப்படையில், உரிய மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×