என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » govt doctor house jewelry robbery
நீங்கள் தேடியது "govt doctor house jewelry robbery"
கோவை பீளமேடு விமான நிலையம் அருகே அரசு டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோவை:
கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பூங்கோதை நகரை சேர்ந்தவர் கண்ணன் மகராஜ்(வயது 45).
இவர் மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சென்றார். நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்ற போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார்.
சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. டாக்டரின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களும் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி விட்டு சுந்தராபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பின்னர் தான் கொள்ளை நடந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து கொள்ளையர்கள் துணிந்து கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் சந்தேகதத்திற்கிடமாக சுற்றித் திரிந்தவர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

×

X