search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt school childrens"

    எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி படிக்கும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகே உள்ள நாமக்கல்பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மனுக்கள் பெற்று குறைகள் கேட்டார்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 வகுப்பு முடியும் போதே மாணவ- மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளிகளுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் ‘‘மெய் நிகர்’’ வகுப்பறை அமைக்கப்படும்.

    இந்தாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    கோபி அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் ஜனவரி மாதம் ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நடப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 7500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.



    மறைந்த ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் தொடர்ந்து நல்ல புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறார். இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி நலமாக வாழ வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×