search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gram panchayat election"

    • தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
    • வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளின் போது எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையில் தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இன்று காலை பாங்கூர் என்ற பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாத வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.

    7 பைகளில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தது யார்?என்று தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் நாசவேலைக்காக இந்த குண்டுகளை யாராவது வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. #panchayatpoll #TrinamoolCongress
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. 621 ஜில்லா பரிசித்துகளுக்கும், 6 ஆயிரத்து 123 பஞ்சாயத்து சமிதிகளுக்கும், 31 ஆயிரத்து 802 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேடபாளர்கள் 1800 கிராம பஞ்சாயத்துகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க. 100 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில்  உள்ளன. வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress
    ×